பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் iŷ'ï

இப்பெருமக்களே சுவை, ஒளி,ஊறு,ஓசை, நாற்றம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும் உள்ளவாறு உணர வல்லவர்கள். அணுமுதல் அண்டம் ஈருகவுள்ள பொருள்களைப் பற்றிக் கூர்ந்து ஆராய்ந்து உணர்த்தவல்ல பேரறிவு, முற்றத்துறந்த முனிவர்களாகிய இப்பெரு மக்க ளுக்கே யுரியதாகும், இறைவன் திருவருள்வழி யொழுகும் நிறைமொழி மாந்தராகிய வாதவூரடிகள், அண்டப் பரப்பின் அகத்தும் புறத்தும் இடையீடின்றிக் கலந்து விளங்கும் இறைவனது இயல்பினை உணர்த்து முகமாக, அவனரு ளாலே அவன் தாள் வணங்கிய மெய்யடியார்களாகிய நீத் தார் பெருமையினையும் உடம்பொடு புணர்த்து விளக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். நிறைமொழி மாந்தர் அருளிய மறைமொழியாக விளங்கும் இத்திருவகவல், திருக் குறளில் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தைப் போன்று திருவாசகத்தில் மூன் ருந் திருப்பாட்டாக அமைக்கப் பெற்றிருப்பது, நீத்தார் பெருமை என்ற அதிகாரத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பை இனிது புலப்படுத்துவதாகும். இந்நிலவுலகும் இதனைச் சூழ இயங்கும். ஏனே உலகங்களும் உருண்டை வடிவினவாய் ஒன்றனுக்கு ஒன்று ஈர்ப்பாற்றல் உடையனவாக இயங்கிவரும் அற்புதக் காட்சியினை வாத வூரடிகள் இவ்வகவலில் விளக்கிய திறம் வியந்து போற்றத் தக்கதாகும்.

ச. போற்றித் திருவகவல்

நான் முகன் முதலா வானவர் தொழுதெழ எனத் தொடங்கும் அகவல், வணக்கம் எனப் பொருள்படும் போற்றி என்னும் தமிழ் மந்திரத்தா இறைவனே முன் னிலைப் படுத்துப் போற்றுவதாதலின், போற்றித் திருவக வல் என்னும் பெயர்த்தாயிற்று. நமச்சிவாய என்னும் மந்திரத்தின் முன்னுள்ள நம’ என்னுஞ் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் போற்றி ' என்பதாகும். போற்று தல் என்பது புகழ்தல், வனங்குதல், குறிக்கொண்டு பாது காத்தல் எனப் பலபொருள் தரும் ஒரு சொல்லாகும். போற்றி என்பது வணக்கம் என்ற பொருளிலும் எம்மைப் பாதுகாத்தருள்க என வேண்டிக்கோடற் பொருளிலும் வழங்கும் செந்தமிழ் மந்திரச் செர்ல் என்பது, போற்றித் திருவகவலாகிய இதலுைம், போற்றித் திருத்தாண்டகம்