பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் iłg

பெருங்கருணைத்திறமும் ஆகியவற்றை இவ்வகவலில் ஒன்று முதல் எண்பத்தாறு வரையுள்ள அடிகளால் மணிவாசகப் பெருமான் விரித்து விளக்குகின் ருர். எண்பத்தேழாம் அடி முதல் இருநூற்றிருபத்தைந்தாம் அடிமுடியவுள்ள இவ் வகவலின் பிற்பகுதி, சிவபெருமானை முன்னிலைப்படுத்திப் போற்றும் மந்திர மொழியாக அமைந்துளது. இப்பகுதி வடமொழி எசுர் வேதத்தின் இடையே கமைந்த திருவுருத் திரத்தைப் போன்று சிவபர்ம் பொருளை மலர் தூவி வழிபடு தற்கேற்ற செந்தமிழ் மந்திரங்களாக அமைந்துளதென்றும், வாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் மந்திரங்க ளாகிய இவை திருக்கோயில்களிலும் பிறவிடங்களிலும் இறைவனை வழிபடுதற்குரிய சிறப்புரிமை வாய்ந்தனவென் றும் ஆசிரியர் மறைமலையடிகளார் தாம் எழுதிய திருவாசக விரிவுரையில் நன்கு விளக்கியுள்ளார்கள்.

திருக்குறளில் உள்ள அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தைப் போன்று திருவாசகத்தில் நான்காம் பனுவ லாக முறைப்படுத்தப் பெற்றது இப் போற்றித் திருவகவ லாகும். முற்றத்துறந்த முனிவர்களால் உணர்த்தப்படும் உறுதிப்பொருள்களுள் இம்மை மறுமை வீடு என்னும்

4. ،« و هم به بر اساس ها ، و f : r - " بيلو پيل - א ל *

மும்மை நன்கங்களையும் ஒருங்கே தருவது அறம் என்ற முதற் பொருளேயாகும். எனவே அவ்வறத்தின் பெருமையினே வலி யுறுத்தும் நோக்கத்துடன் நீத்தார் பெருமை என்ற அதி கசாத்தை யடுத்து அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் வைக்கப்பட்டது. திருக்குறளில் அமைந்த இம்முறையினை யொட்டியே திருவாசகத்திலும் நீத்தாராகிய திருத் தொண்டர்களின் பெருமையினே விளக்கும் திருவண்டப் பகுதியின் பின் என்றும் மாருத நல்லறத்தின் சிறப்பினை வற் புறுத்தும் இப்போற்றித் திருவகவல் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம். இவ்வைப்பு முறையின் அமைப்பினை உணர்தற்கு இப்போற்றித் திருவகவலுக்கும் அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்திற்கும் இடையே அமைந்த தொடர்பினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். -

குற்றமற்ற மனத்தினுல் எண்ணித் துணிந்து இயற்றப் படுவதே அறமென்றும் அதுவும் பொருமை, அவா, வெகுளி, கடுஞ்சொல் ஆகிய குற்றம் நான்கினையும் விலக்கிய நிலையில் நிகழ்வதென்றும் ஆசிரியர் திருவள்ளுவர் அறத்திற்கு இ கணம் கூறியுள்ளார். அறத்தின் இயல்பாக அமைக்