பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ممسقیم امام خم"

با نپ*

திருவாசகம்

மலமாக்குரம்பை இது மாய்க்க மாட்டேன் மணியே

யுனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன்

எனவும், ஊர்நாயிற் கடையானேன் நெஞ்சுருகாதேன் கல்லாமனத்தேன் கசியாதேன்' எனவும், சோரனேன் இங்கொருத்தி வாய்துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர், பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே எனவும் அடிகள் தம் முடைய பிழைகளை நினைந்து வேசறுகின்ருராதலின், இங்ங்ணம் அகங்கரைந்துருக வெளிவந்த இத்திருப்பதிகம், அதுபோக சுத்தி என்னுந் தலைப்புக்கு ஏற்புடையதாய்த் தேனைப்பாலைக் கன்னலின் தெளிவை யொளியைத் தெளிந் தார்தம் ஊனையுருக்கும் உடையான உள்கி உள்ளமுருகும் பெருங்காதலாகிய சுகமேலீட்டுக்குச் சிறந்த இலக்கிய மாயிற்று.

தரிக்கிலேன் காயவாழ்க்கை சங்கராபோற்றி எனத் எனத்தொடங்கும் ஏழாந்திருப்பதிகம், காருணியத்திரங்கல்' என்னுந் தலைப்புடையதாகும். காருணியமாவது இறைவன் உயிர்கள்பால் வைத்த பெருங்கருணைத்திறம். பாசத் தொடர்புகளை அறவேபோக்குவதாய்ச் சிவப்பேற்றுக்குக் காரணமாய் உள்ள இறைவனது திருவருள் பதியப்பெற்ற உயிர், முதல்வனது பெருங்கருணைத் திறமாகிய அதனையே நினைந்து போற்றும் முறையில் இரங்கி வேண்டுவதாக அமைந்தது இப்பதிகமாதலின், காருணியத்திரங்கல் எனக் குறிக்கப்பெறுவதாயிற்று. தம்முடைய இடர்களை யெல்லாம் விரைந்து களைதல் வேண்டும் என்னும் துடிதுடிப்புடன் இறைவனது பேரருளை எதிர்நோக்கி அடிகள் இரங்கிப் போற்றும் முறையீடுகளாக இப்பதிகத் திருப்பாடல்கள் அமைந்துள்ளன. 轮

போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சிவாய புறமெனப் போக்கல்கண்டாய் போற்றியோ நமச்சிவாய சயசய போற்றிபோற்றி.

எனத் திருவாதவூரடிகள் திருவைந்தெழுத்தாரி' மந்திரத்தை ஓம்’ என்னும் பிரணவத்தினுடன் பே உலகமுய்யத் திருவாய் மலர்ந்தருளிய அன்பின்திறம் நினைந்து போற்றத்தகுவதாகும். இங்ங்னம் இறை