பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் ##4

சாழல், உந்தி, அவலிடி (பொற்சுண்ணம்), கொய்யு முள்ளிப்பூ (பூவல்லி) என்பவற்றுக்குரிய பாடல் வகைகள் திருவாசகத்தில் அமைந்துள்ளன. இவையேயன்றி, கோத் தும்பி, தெள்ளேனம், பொன்னுரசல், குயிற்பத்து முதலிய மகளிர் விளையாட்டிற்குரிய இசைப்பாடல்களும் உள்ளன. இங்ஙனம் மணிவாசகப்பெருமான் இறைவனது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் திருப்பாடல்களை விளையாடும் பருவத்து இளமகளிர் கூற்றில் வைத்து அருளிச் செய் துள்ளார். -

" மனைகள் தொறும் இறைவனது தன்மையாடிக்

கருந்தடங்கண்ணுர் கழல் பந்து அம்மானைப் பாட்டபருங்

கழுமலமே " எனவும்,

" கருகு குழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமையகர் முதுகுன்றடைவோமே ' எனவும் வரும் ஆளுடைய பிள்ளையார் தேவாரத் தொடர் களைக் கூர்ந்து நோக்குங்கால், பண்டை நாளில் தமிழகத்தில் வாழ்ந்த இளமகளிர் இயலும் இசையும் பயின்று இறை வனைப் போற்றுதற்குரிய சமய ஒழுக்கங்களிற் சிறப்புற்றி ருந்தனர் என்பது நன்கு புலளும், காரைக்காலம்மையார், மணலாற் சிறு வீடு கட்டி விளையாடும் இளம் பருவத்திலேயே இறைவனது பொருள் சேர் புகழைப் போற்றிப் பயின்ற திறத்தை,

வண்டல் பயில்வனவெல்லாம் வளர்மதியம் புனைந்த சடை அண்டர் பிரான் திருவார்த்தை யனைய வருவன பயின்று எனச் சேக்கிழாரடிகள் பாராட்டிப் போற்றியுள்ளார். மேல் எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் இளமகளிர் விளையாடல் களுள் ஒன்ருகிய பாவைப்பாட்டு முறையிலேயே இத்திரு வெம்பாவையும் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது இனிது புலனும்,

திருவெம்பாவை இருபது பாடல்களை யுடையது. இதன்கண் உள்ள பாடல்கள் யாவும் நான்கடிக்கு மேற்பட்டு எட்டடியால் இயன்ற கொச்சக வொருபோகு எனப்படும்." இவற்றை இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா என வழங்கு

  • தொல் - செய்யுளியல் 149-ஆம் சூத்திரம் பேராசிரியர்

ః_ఖిr.