பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் išš

இயல்பும், திரிபுரம் தீப்பற்றி யெரியும் நிலையில் சிவனை மற வாத சிந்தையினராகிய அவுணர் மூவர் அவனருளால் உய்ந்த வரலாறும், திருமால் சக்கரம் வேண்டித் தம் கண்ணையே தாமரை மலராகக் கொண்டு அருச்சித்த சீர்த்தி யும், தேவர்கள் சிவபெருமானை யிகழ்தலாகிய குற்றத்தைப் புரிந்து வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டுத் துய்மை பெற்ற செய்தியும், திருமாலும் பிரமனும் தேடிக்கான வொண்ணுது அலுத்த நிலையிற் சிவபெருமான் இலிங்கோற்பவராக வெளிப்பட்டருளிய வரலாறும், வாழ்நாள் வழியடைத்துப் பிறவிப் பிணியினைத் தீர்த்தருள வல்லோன் பரம்பரளுகிய இறைவகுெருவனேயாதலின், வீழ் நாள் படாமை அவனை வழிபடுதல் வேண்டும் என்பதும், உரையிறந்த முதல்வ கிைய இறைவனை உள்ளத்தால் நினைந்த அளவில், காம வெகுளி மயக்கங்களாகிய நோய்கள் அறவே கெட்டொழிய ஐம்பொறிகளாகிய பறவைகள் வலிகுன்றியோட ஆன்மா வின் மிகுதிப் பாடாகிய பசுத்துவம் கெட்ட திறமும் பதி ஞன்கு திருப்பாடல்களால் விரித்துரைக்கப் பெற்றன. இப்பதிகப் பாடல் தோறும் ஆடுவாமோ எனற் பாலதாகிய சொல் ஆடாமோ எனத் திரிந்து நின்றது.

சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே புண்ணியமாய் அத்தன் செயுங் கருணைக்கு ஆராமை யுண்மிகுந்து பொத்திய கை கொட்டிப் புகழ்தல் தோளுேக்கம்

என்பது திருவாசகவுண்மை.

சுெ. திருப்பொன்னுரசல்

ஊசல் - ஊஞ்சல். ஊஞ்சலில் ஏறியாடுதல் மகளிர்க்கு மன மகிழ்ச்சி விளக்கும் விளையாட்டாகும். இளமகளிர் ஊச லில் ஏறியாடுங்கால் பாட்டுடைத் தலைவனது புகழ்த் திறத்தைப் பாடிக் கொண்டு ஆடும் நிலையில் அமைந்த இசைப்பாட்டு ஊசல் வரி' எனப்படும். சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் ஊசல் வரிப்பாடல்கள் மூன்றும் சேர மன்னனைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு பாடப் பெற்றவை. இவ்வாறே எல்லாம் வல்ல சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனுகக்கொண்டு ஊஞ்சலாடும் மகளிர்பாடிப் பரவும் நிலையில் திருவாதவூரடிகள் அருளிய பனுவல் திருப் பொன்னுாசல் என்பதாகும். செல்வ மிகுதி தோன்ற ஆடும் மகளிரது ஊசல் பொன்னுாசல் எனப்பட்டது. இதற்கு அருட்சுத்தி எனக் கருத்துரைத்தனர் சான்ருேர், அருட்