பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பன்னிரு திருமுறை வரலாறு


வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரிமேற் கொண் டென் உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும். (அன் -7) எனவரும் திருப்பாடல், குருவாய் வந்து அருள் புரிந்த இறைவன் மீண்டும் குதிரைச் சேவகளுக எழுந்தருளிய திருக்கோலத்தியல்பினை இனிது புலப்படுத்துவதாகும்.

தாளி யறுகினர் கந்தனச் சாந்தினர் ஆளெம்மை யாள்வரால் அன்னே யென்னும் ஆளெம்மை யாளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே யென்னும். (அன் - 8) எனவரும் திருப்பாடல், இறைவன் குருவாய் எழுந்தருளி வந்து திருவாதவூரடிகளே ஆட்கொண்ட நிலையில் அம் முதல்வன் பரமனையே பாடுவார் என்னும் அடியார் திருக் கூட்டத்துள் ஒருவராய்த் தமது திருக்கையில் தாளத்தைக் கொண்டிருந்த தோற்றத்தினை நன்கு புலப்படுத்தல்

காணலாம்.

அெ. குயிற் பத்து

இறைவனைக் காதலித்தாள் ஒருத்தி, சோலையினிடத்தே வாழும் குயிலை நோக்கி, எங்கள் பெருமாளுகிய இறைவனை என்பால் வரக் கூவுவாயாக’ எனக் குறையிரந்து வேண்டும் முறையில் அமைந்த பத்துத் திருப்பாடல்களை யுடைமையால் இது குயிற் பத்து ' எனப் பெயரெய்தியது.

பொங்கரி னிடையே வாழும் பொற்பிளங் குயிலே கூவி இங்கழை எம்பிரான என்பது

எனத் திருவாதவூரர் புராண முடையார் இதன் பொருள் அமைதியைக் குறித்துள்ளார். இதற்கு ஆத்தும இரக்கம்’ என முன்னுேர் கருத்துரைப்பர். ஆத்தும இரக்கமாவது, உயிர் சிவனைக் கண்டு அம்முதல்வனை விரைவில் அடையப் பெறுதல் வேண்டும் என்னும் வேட்கையால் இரங்குதல். " தூய அருட்குயிலே நற்சோதி யெனைக் கூடுதற்குன், வாயினுற் கூவென முன் வாழ்த்தல் குயிற் பத்தாமே " என் பது திருவாசகவுண்மை.

இதன்கண், இறைவனது சோதி மணிமுடி சொல் லிறந்து நின்ற தொன்மையது என்பதும், அம்முதல்வன் பாதமிரண்டும் பாதாளம் ஏழினுக்கப்பால் ஊடுருவிப் பரவிய