பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 其贸3

பாடியுள்ளமை இங்குக் கருதத் தகுவதாகும். பள்ளி எழுந் தருளாய் ' என்ற தொடர்க்கு எமதுள்ளத்தில் திருப்பள்ளி ஒலக்கம் கொள்ள எழுந்தருள்க’ எனப் பொருளுரைப்பர் சீகாழித் தாண்டவராயர்.

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே எனத் தொடங்கும் இத்திருப்பதிக முதற்பாடலில், நின்திருமுகத்து எமக்கு அருள்மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம் என்றது, இறைவனது திருமுகத்தின் முறுவல் நகையினைக் கண்டு அவனருளாலே அவன்தாள் வணங்க விரும்பும் அடியார்களது விருப்பத்தினைப் புலப்படுத்துவ, தாகும். " முத்தா வுன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகை காண, அத்தா சால ஆசைப்பட்டேன் ” (திருவாசகம்ஆசைப்பத்து - 5) என அடிகள் தம் உள்ளத்தமைந்த ஆசையினை வெளியிட்டுள்ளமை இங்கு நினைக்கத்தக்க தாகும்.

இன்னிசை வீணையர் யாழினர் எனத் தொடங்கும் திருப்பாடல், வீணையர் - யாழினர், இருக்கு இயம்பினர் - தோத்திரம் இயம்பினர், துன்னிய பிணைமலர்க்கையினர் - தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஆக எதிர் எதிர்பணி புரியும் இருதிறத்து அடியார்களின் குழுவினைப்புலப்படுத்தும் நிலையில் அமைந்திருத்தல் காணலாம். இவ்வாறே,

" தம்மல ரடியெ ன் றடியவர் பரவத்

தமிழ்ச்சொலும் வடசொலும் தானிழற் சேர அம்மலர்க் கொன்றை அணிந்தஎம் அடிகள்

அச்சிறு பாக்கமது ஆட்சிகொண் டாரே " என வரும் ஆளுடைய பிள்ளையார் வாய்மொழியும், ஆரியம் தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் அடியார்கள் ஒருங்கு நின்று இறைவனை வழிபட்டு மகிழும் திறத்தினைப் புலப் படுத்தி நிற்றல் உணர்ந்து போற்றத் தக்கதாகும்.

பூதங்கள் தோறும் நின்ருய் எனத் தொடங்கும் திருப் பாடல், மாற்ற மனங்கடந்த மறையோனுகிய இறைவனைக் குறித்துப் புலவர்கள் பாடிப் போற்றும் தோத்திரப் பாடல் களின் பொருளமைதியைச் சுட்டுவதாகும். பப்பற' என்னும் முதற் குறிப்புடைய திருப்பாடல், ஆண்டவனைக் காதலனுக வும் தம்மை அவனது அன்புக்குரிய காதலியாகவும் எண்ணி வழிபடும் அடியார்களது ஆராக் காதலைப் புலப்படுத்துவ தாகும். முந்திய முதல் நடு இறுதியுமானுய் எனத்தொடங்