பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

பன்னிரு திருமுறை வரலாறு


உசு. அதிசயப் பத்து அதிசயம் என்ற சொல், மிகுதியென்னும் பொருளுடைய தாகும். அச்சொல் ஒரு பொருளின் மிகுதியால் விளைந்த வியப்பு என்னும் பொருளில் உலக வழக்கில் ஆளப்பெற்று வருவதனை யாவரும் அறிவர். தமக்குத் திருவருள் சுரந்த இறைவனது திருவருட் பெருமையின் மிகுதியைக் குறித்துத் திருவாதவூரடிகள் வியந்து போற்றுவதாக அமைந்தது இப் பதிகமாதலின், இஃது அதிசயப்பத்து என்னும் பெயர்த்தா யிற்று. இந்நுட்பம்,

' வெருவிமலத்தினைச் சீலத்தொன் ருகு மடியர்குழாத்துடனே

கூட்டும் பரம ரருட் பெருமை மிகுதியைப் புகழ்ந்து பாடல் அதிசயப்

பத்தாமே ' எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தால் நன்கு புல ளுதல் காணலாம்.

' உலக வாழ்க்கையிலேயே சிக்குண்டு இறைவனது திருவடிப்பணிக்கு உரிய தகுதியின்றி அல்லற்படும் எளி யேனை என் தந்தையாகிய இறைவன் தன்னருளால் எளி வந்து திருவடி நல்கி ஆட்கொண்டு நேயமிகுந்த மெய்யடியார் களோடு ஒருங்குகூட்டியருளிய வியத்தற்குரிய இச்செயலை நாம் கண்ணுரக் காணப்பெற்ருேம் ' என இறைவனது திரு வருளே வியந்து போற்றும் முறையில் திருவாதவூரடிகள் அதிசயப்பத்தினை அருளிச் செய்துள்ளார். இறைவனது அளத்தற்கரிய பெருமையும், தமது சிறுமையும், அம் முதல்வனது பேரருள் வெள்ளம் தம்பால் விரைந்து பரவிய புதுமையும், அதல்ை விளைந்த பேரானந்தமாகிய ஆக்கமும் விளங்க அடிகள் இத்திருப்பதிகத்தினை அருளிச்செய்துள் ளமை காணலாம்.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான் கே ’’ (தொல் - மெய் - 7) எனத் தொல்காப்பியனர் குறித்த புதும்ை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நால்வகைப் பொருள்பற்றியும் தம்பால் (வியப்புச் சுவை தோன்றிய திறத்தை அடிகள் இப் பதிகத்திற் புலப்படுத்தியுள்ளமை அறியத்தக்கதாகும்.

அதிசயப்பத்தாகிய இதற்கு முத்தியிலக்கணம் அஃ தாவது மோட்சத்தின் அடையாளம் ' என முன்னேர்