பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 205

உற்ருர் ஆருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்ருலத்துறை கூத்தனல்லால் நமக் குற்ருர் ஆருளரே ! எனவும்,

' குற்ருலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய் (8-81-4) எனவும் வரும் அப்பரடிகள் வாய்மொழிகள் இங்கு ஒப்பு நோக்கி உணரத்தக்கனவாகும்.

சல். குலாப்பத்து தில்லையில் சிற்றம்பலவனது திருக்கூத்தினைக்கண்டு மகிழ்ந்த திருவாதவூரடிகள், அடியேற்கு உண்டாகிய மகிழ்ச்சியெல்லாம் தில்லைச் சிற்றம்பலத்துள் ஆடல்புரிந் தருளும் ஆண்டானைச் சார்ந்ததல்ை ஆகியதேயாம் எனத் தமது மகிழ்ச்சி மிகுதியை எடுத்துரைத்து அம்பலவனைப் போற்றும் முறையில் அருளிய திருப்பதிகம் குலாப்பத்து என்பதாகும். குலாவுதல் - மகிழ்தல். அஃது உலா' என் பது போன்று குலா என முதல்நிலையனவாய் ஈண்டுப் பெயராய் நின்றது. நிலாவிரிமுற்றத்துக் குலாவோடேறி ’ (பெருங்கதை. வத்தவ-12-14) என் புழிக் குலா இப்பொருள தாதல் அறியலாம். திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர்

  • உள்ளம் விரும்பு சிவானந்த வெள்ளம் விழைந்த தில்லே நாயகனை

மிகக்கொண்டாடி நிரம்புமனக் களிமிகுத்த இறுமாப்பே குலாப்பத் தாய்

நிகழ்த்தலாமே ' என இப்பதிகக் கருத்தினைக் குறித்துள்ளமை நோக்கத்தக்க தாகும். இப்பதிகத்திற்கு அனுபவம் இடையீடுபடாமை என முன்னேர் கருத்துரை வரைந்தனர். இதன்கண் உள்ள திருப்பாடல்கள் யாவும் அடிகள்பால் சிவாநுபவம் இடையீ டின்றி நிகழுந் திறத்தினை இனிது விளக்குகின்றன. 'குலாத் தில்லை யாண்டானைக் கொண்டன்றே எனப் பாடல்தோறும் இறுதியிலமைந்த தொடர் என்பாலுளதாகிய இம்மகிழ்ச்சிப் பெருக்கு தில்லையம்பலவாணனுகிய ஆண்டவனைக்கொண்டு விளைந்ததேயாகும் எனப் பொருள் தருவதாகும். குலா, எழுவாய், கொண்டன்று, பயனிலை. கொண்டன்று - கொண் டது. ஏகாரம் - தேற்றம். இனி, கொண்டு ' என்பதனை மூன்ருமுருபின் பொருள்படவந்த சொல்லுருபாகக்கொண்டு, ஆடுங் குலா தில்லையாண்டானல் ஆயதல்லவா எனப்

பொருளுரைத்தலும் பொருந்தும்.