பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

பன்னிரு திருமுறை வரலாறு


ச.அ. பண்டாய நான்மறை

பண்டாய நான்மறை என்பது, முதற் குறிப்பாற் பெற்ற பெயர். பண்டு ஆய நான்மறை என்றது. இன்ன நாள் என்று ஒருவராலும் அளந்தறிய முடியாத தொன்மைக் காலத்தே இறைவனது வாய்மொழியாகத் தோன்றிய நான் மறைகளே. அத்தகைய வேதங்களும் தனது இயல்பினை அணுகி அறிய முடியாமல் ஐயா என ஒலமிட்டு அலற அவற் றுக்கு அகப்படாது மேலோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணி யன் இறைவன் என்பார், பண்டாய நான்மறையும் பால் அணுகா என்ருர். உலகங்காக்கும் மூவருள் திருமாலும் அயனும் இறைவளுகிய பெருமானை உள்ளவாறு காணப் பெற்றிலர் என்பார், மால் அயனும் கண்டாரும் இல்லை : என்ருர். இங்ங்ணம் மாலும் அயனும் காணுக் கடவுள் தன் கருணையினுல் எளி வந்து தோன்றி என்னைத் தன் தொண்ட கை ஏற்றுக் கொண்டருளினுன். அவனது கைம்மாறு வேண்டாக் கடப்பாடாகிய பேரருளுக்குக் கடையேன் செய் யும் கைம்மாறு எதுவும் இல்லை என்பார், கடையேனைத் - தொண்டாகக் கொண்டருளுங் கோகழி எம் கோமாற்கு நெஞ் சமே உண்டாமோ கைம்மாறு உரை என்ருர்,

இப்பனுவல், ஏழு வெண்பாக்களை யுடையது. இவ் வெண்பாக்கள் ஒன்ருெடொன்று பொருட்டொடர்பு உடை யனவாக அமைந்துள்ளன. திருப்பெருந்துறை இறைவனை நண்ணி வழிபடும் நம்மவராகிய அடியார்கள் அனைவரும் பாசத் தொடர்பற்று இடர்களெல்லாம் நீங்கிப் பேரின்ப வாழ்வு பெற்று இன்புறுவர் என்னும் மெய்ம்மையினை அடிகள் தமது அருளதுபவங்கொண்டு ஐயமின்றித் தெளி விக்கும் முறையில் அமைந்தது இப்பனுவலாதலின், அநுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல் என இதற்குக் கருத்துரை வரைந்தனர் முன்னேர்.

எந்தை திருப்பெருந்துறையை ஏத்தும் நமரே வாழ்வுற்

றிடர் சேர் பாச பந்த மறுத்திடுவரெனப் பண்டாய நான்மறையும்

பகர்ந்ததாமே !

எனத் திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர் இப்பதிகக் கருத்தினைக் குறித்துள்ளார். இதன்கண்,