பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 22:7

திவ்வியப்பிரபந்தம் முதலிய தெய்வப் பனுவல்களைப் பாடியருளிய பெருமக்கள் பலரும், தன்னேரில்லாத் தல்ைவ ஞகிய இறைவனை ஆருயிர்க் காதலளுகவும் அவனருள் விழைந்த ஆன்மாக்களை அம்முதல்வனைக் காமுற்று வருந்தும் தலைவியாகவும் கொண்டு அகப்பொருள் துறையமையப் பல திருப்பாடல்களைப் பாடியுள்ளார்கள். திருவாசகப் பனுவலைப் பாடியருளிய திருவாதவூரடிகளும் சிவபெருமானைத் தம் ஆருயிர்க் காதலளுகவும் அவனது திருவடிப் பேரின்பத்தை விரும்பிய தம்மைத் தலைவியாகவும் கொண்டு நெஞ்சநெக்குருகிப் பல திருப்பாடல்களைப் பாடிப்

போற்றியுள்ளமை காணலாம்.

' மூலமாகிய மும்மல மறுக்கும்

துாயமேனிச் சுடர்விடு சோதி

காதலனுகிக் கழுநீர் மாலை

ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும் '

(கீர்த்தித்திரு அகவல் - 111-114)

எனவரும் அடிகள் திருவாக்கு, அவர் ஆண்ட்வனைத் தலைவனுகவும் தம்மை அவனருளுக்கு ஏக்கற்று வருந்தும் பெண்ணுெருத்தியாகவும் கருதி நெஞ்சங்கரைந்து அன்பு நெறியில் நின்ருெழுகியவர் என்பதனை நன்கு புலப்படுத்து வதாகும்.

" அடியவன் தன்னை ஒரு காதலியாகவும் ஆண்டானைக் காதலனுகவும் வைத்துரைத்தல் மரபாதலானும், நான்காவ தாகிய சன்மார்க்கம் அல்லது ஞானமார்க்கத்தின்கண் ஆண்டானுக்கும் அடியவனுக்குமுள்ள நெருங்கிய இயை பினுக்குக் காதலன் காதலி என்னும் இருவர்க்குமுள்ள நெருங்கிய உறவினையே எடுத்துக்காட்டல் தொல்லாசிரியர் வழக்காய்ப் போதரலானும், அடிகளைச் சன்மார்க்கத்திற் குரியராகவே சான்ருேரெல்லாம் கூறுதலானும், இக்கருத்துப் பற்றியே அடிகளும் திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச் செய்தமையானும் ஈண்டுக் காதலளுகி என அருளிச் செய்தது பொருத்தம் உடைத்தேயாம் " என்பர் அறிஞர்."

தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் முழு முதற் கடவுளாகிய சிவபெருமானே மதுரைத் தமிழ்ச்

  • திருவாசக விரிவுரை (மறைமலையடிகள்)