பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 287

இரவுக்குறி என்பது, பகற்குறியிடத்துத் தலைமகளைக் கண்டு அளவளாவிய தலைவன், அவளை மணந்து ஒழுகுதலே தக்கது என்னுந் தெளிவின்றி மீண்டும் தோழியை யடைந்து, ' இற்றை இரவிற்கு யான் உங்கள் சிற்றுார்க்கு விருந்தினன். என்னை ஏற்றுக்கொள்வாயாக எனத் தோழியை வேண்டித் தலைமகளை இரவுக்குறியிடத்து எதிர்ப் பட்டுக் கூடுதல். இது, தலைவன் இரவுக்குறி வேண்டல் முதலாகத் தோழி அலரறிவுறுத்தல் ஈருக முப்பத்து மூன்று துறைகளையுடையது.

இவ்வாறு தோழியின் இசைவுபெற்று இரவுக்குறியிடத் துத் தலைமகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்த தலைமகன், அலர் எழுந்ததென்று விலக்கப்பட்ட பின்னர்த் தெளிவுற்று மணந்து கொள்ளுதல் தக்கது. அங்ஙனம் தெருளாளுயின் அவ்அலர்மொழியடங்குமாறு சில நாள் ஒருவழித் தணந் துறைதல், தலைமகளை உடன் கொண்டுபோதல், தோழியால் வரைந்து கொள்ளும்படி தூண்டப்பட்டு அருங்கலம் அனுப்பித் தலைமகளை மணந்து கொள்ளுதல் இம்மூன்றினுள் ஒன்று செய்தல் முறையாகும் என்பர். அவற்றுள் ஒருவழித் தணத்தல் என்பது, தலைமகளை இரவும் பகலுமாகப் பல காலும் தான் எதிர்ப்படுதலால் உளவாம் பழிச்சொற்களுக்கு அஞ்சி விலகிய தலைமகன், அவளைக் காணுத நிலையில் நீங்கி ஓரிடத்து ஒதுங்கியுறைதல். இஃது அகன்றணேவு கூறல் முதல் வருத்த மிகுதி கூறல் ஈருகப் பதின் மூன்று துறைகளை யுடையது.

இவ்வாறு ஒருவழித் தணத்தல் நிகழாதாயின் உடன் போக்கு நிகழும்.

உடன் போக்கு என்பது, தலைமகன், தோழியின் இசைவு பெற்றுத் தலைமகளை அவர்தம் பெற்ருேரறியாதவாறு தன் னுடன் அழைத்துக்கொண்டு, நடத்தற்கரிய வழியிலே நடந்து வேற்றுார்க்குச் செல்லுதல். இது, பருவங்கூறல் முதல் அழுங்குதாய்க்குரைத்தல் ஈருக ஐம்பத்தாறு துறை களையுடையதாகும்.

இவ்வாறு உடன்போக்கு நிகழாதாயின், மணஞ் செய்து கொள்ளுதல் நிகழும். அது நிகழுங்கால் தலைமகன் தலைமகளை மணந்து கொள்ளுமாறு தோழியால் விரைந்து தூண்டப்பட்டும், பொருள் தேடப் பிரிந்து வந்தும் மணம் நிகழும் என்பர்.