பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

பன்னிரு திருமுறை வரலாறு


பொருள்வயிற் பிரிதல் ஈருக முப்பத்துமூன்று கிளவிக்

கொத்துக்களாக வகுககப பெற்றுள்ளன.

அகத்திணை யொழுகலாற்றில் உரையாடுதற் குரியவர் களுள் தலைவன், தலைவி, தோழி என்னும் இம்முவருமே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவராவர். திருக்குறள் காமத்துப் பாலில் அமைந்த கூற்றுக்கள் யாவும் மேற்குறித்த மூவர் கூற்றுள் அடங்குதல் காணலாம். இத்திருக்கோவையில் இன்னர் கூற்றென்னது துறை பற்றிய நிகழ்ச்சி யளவிற் குறித்த பாடல்களும் உள்ளன. அப்பாடல்களைத் துறை கூறிய கருத்து' என இந்நூலுரையாசிரியர் குறித்துள்ளார். 258ஆம் திருப்பாடலுரையில், "இதுவும் துறை கூறிய கருத்து, மகிழ்வுற்றது என, இன்னர் கூற்றென்னது துறை கூறினர் ” எனவும், இவ்வாறே 366, 367, 397-ஆம் பாடல்களின் உரையிலும் அவ்வுரையாசிரியர் குறித்துச் செல்லுதலைக் கூர்ந்து நோக்குங்கால், அகத்தினைப் பாடல் களில் இன்னர் கூற்றெனத் தெளிவாக உணர்ந்துகொள்ளு தற்குரிய கூற்றென்னும் அகப்பாட்டுறுப்பின்றி, அத் துறைப் பொருளை மட்டும் விரித்துரைக்கும் நிலையில் அமைந்த அகப் பாடல்களைத் துறை கூறிய கருத்து ' எனக் குறித்துரைக் கும் வழக்க முண்மை இனிது புலம்ை. இத்தகைய துறைப் பாடல்களாக வறிது நகை தோற்றல், முறுவற் குறிப் புணர்தல் என்பன பிற்காலக் கோவைநூல்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் வறிது நகை தோற்றலைச் சிலர் தலைவன் கூற்ருகவும் சிலர் கவிக் கூற்ருகவும் அமைத்து

盟_邸雷gT峦雷擅”。

அகனைந்திணைக் கோவையாகிய இப்பிரபந்தத்தில் பாடாண்டினை யென்னும் புறத்தினை யமையப் புலவளுற் பாராட்டப் பெறும் பாட்டுடைத் தலைவன் எனவும், கூற எடுத்துக்கொண்ட அகப்பொருளொழுகலாற்ருெடு தொடர்பு உடைய கிளவித் தலைவன் எனவும் இருவேறு தலைவர்கள் இடம் பெறுவர். அவருள் கோவைப்பனுவலாற் புறத்திணை யில் வைத்துப் புகழப்படும் தலைவன், பாட்டுடைத் தலைவன் ஆவன். கோவையிற் கூறும் அகப்பொருளொழுகலாற்றிற் குரியனுகப் பேசப்படும் தலைவன் கிளவித் தலைவன் எனப் படுவான். கிளவித் தலைவனது இயற்பெயர் கூறுதல் மரபன்று ; வெற்பன், நாடன், விடலை, ஊரன், சேர்ப்பன்