பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை క్ట్రి

என்பது இறையனர் களவியலுரையில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழஞ் சூத்திரமாகும். தலைமகள் தனக்குத் தலைமகனேடுண்டாகிய புணர்ச்சியொழுக்கத்துக்குக் காவற் ருேழியாகிய இவளால் இடையூருகும் என்னுமுள்ளத்தளாய் நின்று, இவ்வொழுக்கத்தைத் தோழியறியின் நன்று என் னும் நினைவினளாக, அந்நிலையில் தோழி அவளை நாணவும் நடுங்கவும் நாடுதல் இயல்பு என்றும், அவ்வகை நாட்டம் நன்னிலையுடையதே யென்றும் கருதிய திருவாதவூரடிகள், இத்திருக்கோவையில் நாண நாட்டம், நடுங்க நாட்டம் என் னும் இருவகைக் கிளவிகளையும் எழில்பெற அமைத்துள்ளார். தலைவி பெருநாணினள் ஆதலானும் தான் குற்றேவல் மகள் ஆதலானும் மறைவெளிப்படும் நிலையில் அவள்பால் தான் உரையாடாது அவளைக்கொண்டே கேட்பது காரணமாக அவளை நெருங்கி நின்று, புலியொன்று ஒருவனை எதிர்ப் பட்டது எனத் தோழி தலைமகள் உள்ளத்தில் நடுக்கந் தோன்றும்படி அவளை ஆராய்தல் நடுங்க நாட்டம் எனப் படும். இத்துறையில் அமைந்தது,

ஆவா விருவ ரறியாவடிதில்லை யம்பலத்து மூவாயிரவர் வணங்கநின் ருேனையுன் னரின் முன்னித்

தீவாயுழுவை கிழித்ததந்தோ சிறிதேயிழைப்பித் தாவாமணிவேல் பணிகொண்ட வாறின் ருெராண்டகையே.

(திருக்கோவை-72)

எனவரும் திருப்பாடலாகும். ஆ ஆ அயன் திருமால் ஆகிய அவ்விருவரும் அறியாத திருவடியினைத் தில்லைச் சிற்றம்பலத்திலே அந்தணர் மூவாயிரவரும் கண்ணுரக் கண்டு வழிபாடு செய்யும் வண்ணம் நின்றருளிய இறைவனை நினையாதாரைப்போலே வருத்தமுற ஒரு புலி எதிர்ப்பட்டுத் தனது கொடிய வாயை அங்காந்தது (அவ்வாறு அது வாயினைத் திறந்ததாக அந்நிலையில்) ஆடவருட் சிறந்தான் ஒரு வீரன் அதனைச் சிறிதே தப்புவித்துத் தனது அழகிய வேற்படையினைப் பணிகொண்ட திறன் பெரிதும் வியக்கத் தக்கதாகும்" என்பது இதன் பொருள்.

அயனும் அரியும் தில்லையம்பலத்திற் சென்று வணங் குமாறு அறிந்திலராகலின், ஆவா என்பது அருளின்கண் குறிப்பு ; இரக்கத்தின்கண் குறிப்பாய்த் தீவாய் உழுவை கிழித்தது என்பதனை நோக்கி நின்றதெனினும் அமையும்

§ {

  • அங்காத்தல் - வாயைத் திறத்தல்.