பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

பன்னிரு திருமுறை வரலாறு


காண்பான் அவாவினுற் காதலன் காதலியின் நடவா நிற்ப

நாண் பாலஸ் ஆதலால்'நன் னுதல் கேள்வன் பின் நடவா நிற்ப

ஆண்பான்மை குன்ரு அயில்வேலவன் தனக்கும்

அஞ்சொலாட்கும்

பாண்பால வண்டினமும் பாட அருஞ்சுரமும்

பதிபோன்றன்றே. (தொல்-அகத்-40-நச்) எனவரும் மேற்கோட் செய்யுளாகும். இதன்கண் மேற் காட்டிய திருக்கோவையிலுள்ள அஞ்சொல்லி என்பது அஞ்சொலாள் எனவும், ! ஆடவன் என்பது, ஆண்பான்மை குன்ரு அயில்வேலவன் எனவும் விளக்கமுற அவ்வாறே எடுத்தாளப் பெற்றிருத்தலையும், தலைவனும் தலைவியும் ஒருவர்பின் ஒருவர் செல்ல விரும்புதற்குரிய முறையிற் பேராசிரியர் இத்திருக்கோவையுரையிற் குறித்த காரணங் கள், காண்டான் அவாவினுல் என்றும், ' நாண் பாலள் ஆதலால் என்றும் அவ்வாறே இப்பாடலில் எடுத்தாளப் பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், தொல்காப்பிய மேற்கோட் செய்யுளாகிய இது, மேற்குறித்த திருக் கோவைச் செய்யுளையும் அதற்குப் பேராசிரியர் எழுதிய உரையினையும் உளத்துட் கொண்டு இயற்றப்பெற்ற தென் பது இனிது புலம்ை.

பாலைநில வழியே தலைமகளைத் தேடிச் செல்லும் செவிலி, தன் மகளையும் அவள் காதலனையும் பற்றித் தன் எதிர் வருவோரைக் கண்டு வினவினுளாக, அவர்கள் அவளே நோக்கி அன்னையே, நீ கூறிய கொள்கையினராகிய காதலர் இருவரையும் குன்றத்திடையே கண்டோம் ; அவ் விருவரும் அன்பினுற் பிரிவின்றி இயைந்து ஒருங்கு செல் கின்றதனைக் கண்டு, எல்லாவற்றையும் உடையாளாகிய தன் தேவியுடன் ஒருவடிவாய் விளையாடும் புலியூரிறைவ கிைய உமையொருபாக னென்றே கருதி யாங்களெல்லாம் உள்ளம் ஒருப்பட்டு அவ்வழகினைத் தொழ நினைந்தோம். அந் நன்மை சொல்லால் வெளியிட்டுரைக்கும் எளிமை யுடையதன்ரும் ' என வியந்து கூறுவதாகவுள்ளது,

மின்ருெத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டு மின்ன ஒன் ருெத்திட வுடையாளொடொன் ரும்புலியூரனென்றே நன்ருெத் தெழிலைத் தொழவுற்ற னம் என்ன தோர்

நன்மைதான் குன்றத்திடைக் கண்டனம் அன்னை நீ சொன்ன

கொள்கையரே. (246)