பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை

குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு

கோங்கம் விராய் நறப்பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர் மறப்பா னடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்று சென்று பிறப்பா னடுப்பினும் பின்னுந் துன்னத் தகும்

பெற்றியரே. (205)

என்னுந் திருக்கோவையாகும். ' குறக்குடியிற் பிறந்த பாவை போல்வாய், இறைவனது திருத்தலமாகிய பெரும் பற்றப்புலியூரை மறக்கக்கூடுவதொரு தீவினை விளைவு வருமாயின், பல பிறப்புக்களினுஞ் சென்று சென்று பிறக்கக் கூடினும் பின்னுஞ் சென்று சேரத்தகும் நற்பண்பினை யுடைய தலைவர், நின் கூந்தலின்கண் அணியப்பெற்ற வேங்கைப்பூவொடு கோங்கமலரைச் சேர்த்துத் தேனை யுடைய பாதிரிமலரை அணியக் கருதுகின்ருர் ” என்பது இதன் பொருள். இதன் கண் நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம் விராய், நறப்பாடலம் புனைவார் நினைவார் என்றது, ' குறிஞ்சி நிலத்தவளாகிய நின்னை நீரற்ற பாலைநில வழியிலே உடன்கொண்டு செல்லத் துணிந்தார்’ என்பதனை உணர்த்தியவாறு ஈண்டு வேங்கை குறஞ்சி நிலத்தையும், கோங்கம் பாடலம் (பாதிரி) என்பன பாலை நிலத்தையும் உணர்த்தி நின்றன. புலியூரை ஒருகால் நினைந்த துணையானே பிறவி கெடுமன்றே ; அவ்வாறன்றி அதனை மறந்தவாற்ருனே பிறக்கக் கூடினும் என்னுங் கருத்தால் பிறப்பான் அடுப்பினும் ' என்ருள். அலர்நாணி உடன் போகாது ஈண்டு இற்செறிக்கப்பட்டு அவரை எதிர்ப் படாதிருத்தல் அன்பன்று என்னுங் கருத்தால், பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்னத்தகும் பெற்றியர் ’ என்ருள். தோழிகூற்றில் அமைந்த இத்தொடர்,

இம்மை மாறி மறுமையாயினும்

நீயாகியர் என் கணவனை

யாளுகியர் நின் னெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை 49)

எனத் தலைவி கூற்ருக அமைந்த தொடர்ப் பொருளை அடி யொற்றியுள்ளமை கூர்ந்துணரத்தக்கதாகும்.

மறைநிலை திரியினும் கடல் முழுதும் வற்றினும் இவளிடத்து நின் அருள்திரியாமற் பாதுகாப்பாயாக எனத் தோழி தலைமகனுக்கு ஒம்படை கூறித் தலைமகளைக் கொடுப்பதாக அமைந்தது,