பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை: {ద్ధి

எனவும் வரும் இரண்டு தாழிசைப் பொருள்களும் இத்திருக் கோவையில் எடுத்தாளப் பெற்றிருத்தல் இங்கு ஒப்பிட்டு உணரத் தக்கதாகும். மேற்காட்டிய பாலைக்கலியில் மூன்ருந் தாழிசையிற் குறிக்கப்பட்ட ஏழ்புணரின்னிசை இத் திருக் கோவையிற் குறிக்கப் பெறவில்லை, பாலைக்கலியாசிரியர் குறித்த சந்தனமும் முத்தும் ஆகிய இரண்டையும் இத்திருப் பாடலில் எடுத்துக்காட்டிய திருவாதவூரடிகள், அவ்வாசிரிய ரால் மூன்ருவதாகக் குறிக்கப்பட்டுள்ள ஏழ்புண ரின்னி சையை எடுத்துக்காட்டாமல் அதனைக்குறிப்பிட வேண்டிய இடத்தில் வெண்சங்கினைக் குறித்துள்ளார். உற்ருர்க்குரியர் பொற்ருெடி மகளிர் என்னும் ஒருண்மையினை வற்புறுத்தும் நோக்குடன் காட்டப்படும் இவ் ஏதுக்கள், ஊற்றுணர்ச்சி யுடைய மெய்க்கு அணியாம் ஒரு தன்மையினைக் குறித்தன வாகவே அமைதல் நன்றென்னும் கருத்தில்ை, செவிக் கின்பந்தரும் ஏழ்புணர் இன்னிசையைக் குறிப்பிடாது மெய்க்கு அணிசெய்யும் வெண்சங்கினை அடிகள் இத் திருப்பாடலிற் சேர்த்துக் கூறியுள்ளமை கூர்ந்துணர்தற் குரியதாகும்.

இரவும் பகலும் இங்கு வாராது தவிர்க எனத் தலை வன வரவுவிலக்கின.தோழி, இனி நீ தலைவியை மணத் தற்கு ஏற்றகாலம் இதுவாகும் ' என்றுரைத்து மணந்து கொள்ளத் தூண்டுவதாக அமைந்தது,

மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யா தயின் றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா மெய்யா அரியதென் அம்பலத்தான் மதியூர்கொள் வெற்பின் மொய்யார் வளரிள வேங்கை பொன் மாலேயின்

முன்னினவே. (262)

எனவரும் திருக்கோவையாகும். இருள் நிரம்பிய வாழைக் காட்டின்கண் வருக்கைப் பலாவின் பழம் முதிர்ந்து விழுத லால் உண்டாகிய தேனை இளைய பெண்குரங்குகள் தேனென்று அறியாமல் (நீர் எனக்கருதி நிறையப்) பருகி, அதனுல் உண்டாகிய களிப்பினுல் மயக்கமுற்றுத் தளரும் மலையினையுடைய தலைவனே, வானத்தில் மதி வளர்ந்து நிரம்பாநின்றது; தில்லைச் சிற்றம்பலவணுகிய இறைவனுக் குரிய இம்மலையின்கண் செறிந்து வளர்ந்துள்ள வேங்கை மரங்கள் பொன்மாலைகள் போற் (கொத்தாகப்) பூத்துத் தோன்றுகின்றன. இப்பொழுது உண்மையாக(த் தலைவி