பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

பன்னிரு திருமுறை வரலாறு


செல்வா ரல்லரென் றியானிகழ் தனனே ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந்தனரே ஆயிடை, இருபேராண்மை செய்த பூசல் நல்ல ராக் கதுவியாங் கென் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே (48) எனவரும் குறுந்தொகையினையும். இதனைப் பின்பற்றி யமைந்த,

செல்லா ரவரென் றி யானிகழ்ந் தேன்சுரஞ் செல்லத் தன் கண் ஒல்லா ளவளென் றவரிகழ்ந்தார் மற் றுவையிரண்டும் கொல்லா ரயிற்படைக் கோனெடு மாறன் குளந்தை வென்ற வில்லான் பகைபோ லெனதுள்ள ந் தன்னை மெலிவிக்குமே. (43) என்னும் பாண்டிக்கோவையினையும் சொற்பொருள் வகை யால் ஒத்தமைந்திருத்தல் உணர்தற்குரியதாகும்.

தலைமகன், தலைவியைப் பிரிந்து பொருள் தேடக் கருதிய தன்னெஞ்சொடு புலந்துரைப்பதாக அமைந்தது,

நாய்வயி னுள்ள குனமுமில் லேனே நற்ருெண்டு கொண்ட தீவயின் மேனியன் சிற்றம்பல மன்ன சின் மொழியைப் பேய்வயினும் மரிதாகும் பிரிவெளி தாக்குவித்துச் சேய்வயிற் போந்த நெஞ்சே யஞ்சத்தக்கதுன் சிக்கனவே. | திருக்கோவை 343) எனவரும் திருப்பாடலாகும். இதன் கண், மல்குசுனை மலர்ந்த (347) என்னும் குறுந்தொகைப் பாடலில் வரும் நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே என்ற தொடர்ப் பொருளும், அரிதரோ பேயோ டேனும் பிரிவு என்னும் பழமொழியும் இடம் பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். சிலவாகிய மொழியினையுடைமை தலைமகளிர்க்குரிய சிறப் பியல்பாகும். இக்கருத்துப்பற்றியே தலைவியைச் சின் மொழி' எனக்குறித்து வழங்குதல் மரபு. வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையை (குறுந்தொகை 14) எனவும், ஒத்ததோ சின்மொழி (கலித்தொகை 1) எனவும் வரும் சங்கச் செய்யுள் மரபின்வழி அடிகள் தலைவியைச்

சின்மொழி எனக்குறித்துள்ளார்.

பள்ளியிடத்துத் தலைமகளுெடு ஊடிய தலைமகள், தில்லையிலுள்ள தலைவனே. நின் காதலிமாராகிய பரத்தை யர்கள் நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதல்களே யாம் செய்யமாட்டேம் , அதிகளுல் எமது மேகலையைத் தொடாதே எனப் புலந்து கூறும் முறையில் அமைந்தது,