பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

பன்னிரு திருமுறை வரலாறு


என்பதாகும். இராப்பொழுதின்கண் பறந்து சென்று திசையைக் கடந்து இரைதேர்ந்துண்ணும் இயல்புடைய வெளவால், தான் இரைதேர்தற்குரிய காலமல்லாமையால் பகற்பொழுதில் வந்துதங்கியிருத்தற்கு இடளுகிய பெரிய மரத்தினை ஒத்து (இரவுப்பொழுதில்) தனித்துறையும் நமது இயல்பினையறியாது விறலியும் பாணனும் நம் தலைவர்க்குத் துயிலெழுமங்கலம் பாடுதல் கருதி இங்கு வந்ததன்றி, நமது ஆற்ருநிலைமைகண்டு நம்மை இகழ்ந்து நகைத்தற்பொருட்டு இங்கு வந்தவர்களல்லர் எனத் தோழி பாணனது வர வுரைத்துத் தலைமகள்பால் தோன்றிய வெகுளியையும் உடனே தணித்தாள் என்பதாம். இதன்கண் சென்று இராத்திசைபோம் பறலியல் வாவல் பகலுறைமாமரம் போலும் என்றது, தன்கண் நிலையாக வாழும் வெளவால் இரவில் தன்னைவிட்டு நீங்கி இரைதேர்தற்பொருட்டுப் பறந்து செல்லத் தனித்துறைதல் அதற்கு இடந்தந்த முதுமரத்திற்கு இயல்பாதல் போலத் தலைவர் நீங்கத் தனித் துறைதல் நமக்கு இயல்பென்றும், பகலில் முதுமரத்தில் தங்கியிருந்து இரவில் இரைதேர்தற் பொருட்டுப் பறந்து செல்லும் வெளவாலைப்போன்று இம்மனைக்கண் பகலில் தங்குதலும் இரவில் நீங்கிச் செல்லுதலும் அவர்க்கியல் பென்றும் கூறியவாறு. இத்தொடர்,

கொடுமென் சிறைய கூருகிர்ப்பறவை

அகலிலைப் பலவின் சாரல் முன்னிப்

பகலுறை முதுமரம் புலம்பப் போகும்

சிறுபுன்மாலை : (குறுந்தொகை 352) எனவரும் பாடற்பொருளை உளங்கொண்டு கூறியதாகும்.

நிலமும் விசும்பும் அவற்றிடைப்பட்ட நீர், தீ, காற்று, நிலத்திலுள்ள மலை முதலியனவும் ஆகிய எல்லாப் பொருள் களையும் படைத்தளித்தவன் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானே என்னும் உண்மையினை,

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும்

(திருக்கோவை 17)

என வரும் தொடரில் திருவாதவூரடிகள் குறித்துப் போற்றி யுள்ளார். இத்தொடர்,

நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போ டைந்துட னியற்றிய

மழுவாள் நெடியோன் தலைவளுக ! (மதுரைக்-453-5)