பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் திருக்கோவையாரும்

திருவாதவூரடிகள் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறட் கருத்துக்களையும் சொற்பொருள் நலங் களையும் தாம் இயற்றியருளிய அகப்பொருட்கோவையாகிய இத்திருக்கோவையில் ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார்.

இயற்கைப் புணர்ச்சியில் தலைமகளைக் கண்ணுற்ற தலை மகன் இங்ங்ணம் தோன்றுகின்ற இப்பெண், திருமகள் முதலாகிய தெய்வமோ அல்லது மக்கட்குலத்திற் பிறந்தா ளொரு மங்கையோ என ஐயுற்றுக் கூறுவதாக அமைந்தது,

போதா விசும்போ புனலோ பணிகளது பதியோ யாதோ அறிகுவ தேதுமரி தி யமன் விடுத்த துதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை மாதோ மடமயிலோ என நின்றவர் வாழ் பதியே.

(திருக்கோவை. 2)

என்ற திருப்பாடலாகும். இயமன் விடுத்த துதோ, அனங் கன் துணையோ, தில்லைமாதோ மடமயிலோ என நின்றவர் வாழ்பதி, போதோ, விசும்போ, புனலோ, பணிகளது பதியோ, யாதோ, ஏதும் அறிகுவது அரிது’ என இயைத்துப் பொருள் கூறுவர் பேராசிரியர். ' யமனுல் விடுக்கப்பட்ட துதோ, வசித்தற்குரியாரை வசித்தற்கு மன்மத னுக்கு உண்டாகியதொரு துணையோ, ஒப்பிலாதானது பழம்பதியாகிய தில்லைக்கண் வாழ்வார் ஓர் மாதரோ, மடப்பத்தையுடைய மயிலோ என்று சொல்லும் வண்ணம் நின்ற இவரது வாழும் இடம், தாமரைப் பூவோ, ஆகாயமோ, நீரோ, பாம்புகளது பதியாகிய நாகருலகமோ, இவையன்றி வேறு யாதோ, சிறிதும் துணிதல் அரிது எனத் தலைமகன் தலைமகளே ஐயுற்று நின்ருன் என்பதாம். இத்திருப்பாடல்,

' அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர் கொல் மாலுமென் னெஞ்சு (1081)

என்னும் திருக்குறளுக்குத் திருவாதவூரடிகள் அருளிச் செய்த விளக்கவுரையாகத் திகழ்தல் உணர்ந்து மகிழத் தக்க