பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை ఢ్ః

கொணர்ந்த மலர்கள் தூய்மையிழவாதபடி பூக்குடலையை விசும்பில் நிற்கப்பணித்துப் பின்பு பிணத்திற்கு உயிர் உண்டாக்கி அதனைச் சுடுகாடளவும் நடந்து செல்லும்படி கட்டளையிட்டார். இவரது பேரழகில் ஈடுபட்டு இவரையே இடைவிடாதெண்ணிய மகளிர் சிலர் இவரையொத்த சாயல் அமைந்த புதல்வர்களைப் பெற்றனர். அது கண்டு ஐயுற்று வெறுப்படைந்த வேதியர் சிலர், திருமாளிகைத் தேவர் கூடாவொழுக்கம் உடையவராயிஞர் என்று அரசனிடம் முறையிடுவாராயினர். அம்முறையீட்டைக்கேட்டு வருந்திய நரசிங்கராசன் திரும்ாளிகைத் தேவரைக் கயிற்ருற்பிணித்து வரும்படி ஏவலாளர் சிலரையனுப்பினுன். அவர்கள் திருவாவடுதுறைக் கோயிலைடைந்து அங்கு அமர்ந்துள்ள திருமாளிகைத் தேவரது திருமேனியைத் தாங்கள் கயிற்ருற் கட்டுவதாக நினைத்துத் தங்களுள் ஒருவரொருவரைக் கட்டிக்கொண்டு திரும்பினர். திருமாளிகைத் தேவர் வாராமை கண்டு சினமுற்றவேந்தன் அவரை வெட்டிக் கொணர்மின் என ஏவலாளர்க்குக் கட்டளை யிட்டான். அரசன் கட்டளையாற் சென்ற ஏவலாளர், திருமாளிகைத் தேவரை வெட்டுவதாக எண்ணித் தங்களுள் ஒருவனேயே வெட்டிக் கொணர்ந்தனர். அத்துன்ப நிலையைக் கண்டு வெகுண்ட வேந்தன், திருமாளிகைத் தேவரைக் கொல்லக் கருதிச்சேனையுடன் புறப்பட்டான். மன்னனதுசேனை தம்மை யழிப்பதற்கு வருவதனையுணர்ந்த திருமாளிகைத்தேவர் உமையம்மையார்பால் விண்ணப்பஞ் செய்ய, அம்மையார் திருவருளால் அத்திருக்கோயில் மதிலின்மேற் சுதையாற் செய்யப்பட்டிருந்த நந்திகள் உயிர்பெற்றெழுந்து சேனை களையழித்து மன்னனைத் தோற்ருேடச் செய்து திரும்பின. சேந்தனருடன் தில்லைக்குச் சென்ற திருமாளிகைத் தேவர் தில்லைத் திருவீதியில் ஓடாது தடைப்பட்டு நின்ற திருத் தேரை வடமின்றியோடி நிலைசேரத் திருப்பதிகம் பாடிப் போற்றினர். இவ்வாறு திருவருள் விளக்கமுடையராய்த் திகழ்ந்த திருமாளிகைத்தேவர் திருவாவடுதுறையிலமர்ந் திருந்து சிவனடி சேர்ந்தனர் என்பது இவரைப்பற்றி வழங் கும் கதையாகும். இக்கதையிற் குறிப்பிட்டசெய்திகள் சில,

' குடங்கர் விசும்பிடை நிறுவிக்

குணபநடந் திடவியக்கிக் கொடிஞ்சிப்பொற்றேர் வடங்கழற்றி யோட்டி மதில்

நந்திகளை வரவழைத்து வரை நன்காட்டின்