பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 357

தல் கூடுமென்றும் கொள்ள இடமுண்டு. இவற்றை வலி யுறுத்தற்கு வேறு சான்றுகளும் வேண்டும்.

மூன்ருங் குலோத்துங்க சோழனது ஆட்சியின் மூன்ரு மாண்டில் கோட்டுர்க் கோயிலுக்கு நுந்தாவிளக்கு வைத்த திருமாளிகைப் பிச்சரென்பவர் திருவிசைப்பா ஆசிரியராகிய திருமாளிகைத் தேவரது பெயரைத் தாங்கிய அரசியல் தலைவராவர். இவரைப் போன்று திருவிழிமிழலைத் திருக் கோயிற் கல்வெட்டிற் குறிக்கப்பட்ட ஜயந்தன் திரு மாளிகைத் தேவரென்பவரும் திருவிசைப்பா ஆசிரியரின் பெயரைத் தாங்கிய மற்ருெரு தலைவராகவும் இருத்தல் கூடும்.

திருமாளிகைத்தேவர் பாடிய நான்கு பதிகங்களும் தில்லைக்குரியனவாக அமைந்திருத்தலால் இவர் நெடுங் காலம் தில்லையில் தங்கியிருந்து கூத்தப்பெருமானை வழிபட்டவராதல் வேண்டும். இவர் திருமூலர் பரம்பரையில் வந்தவராகப் பேசப்படுதலால் இவர் சிவயோக நெறிநின்ற தவ முனிவரென்றும் இவரது சமாதி திருவாவடுதுறையி லமைந்திருத்தலை நோக்குமிடத்து இவர் திருவாவடுதுறை யில் தங்கியிருந்தபொழுது இறைவன் திருவடியிற் கலந்திருத்தல் வேண்டுமென்றும் கொள்ளுதல் பொருத்த மாகும.

திருமாளிகைத்தேவர் பாடிய பதிகங்கள் நான்கிலும் நாற்பத்தைந்து பாடல்கள் உள்ளன. உயிரை யின்றி யமையாத கண், ஒருருவத்தைக் காணுங்கால் உயிரானது கண்ணுடன் பிரிப்பின் றிக் கலந்து நின்று அவ்வுருவத்தைக் கண் ணுக்குக் காட்டித் தானும் காணுமாறுபோல, இறைவனை யின்றியமையாத உயிர், ஒரு பொருளை அறியுங்கால் இறைவனது பேரறிவானது, உயிரறிவோடு பிரிப்பின்றிக் கலந்து நின்று அப்பொருளை உயிர்க்கு அறிவித்துத் தானும் அதளுேடு ஒருங்கறிந்து உதவும். உயிர்களுக்கு இறைவன் செய்யும் இப்பேருதவி, உயிர்கள் பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள பெத்த நிலையிலும் பாசம் நீங்கி யின்புறும் முத்தி நிலையிலும் ஒப்ப நிகழும் என்பர். தீயானது ஒரு பொருளிற் றங்கிநின்று சுட்டு ஒன்றுவித்த லாகிய தன் தொழிலை நிகழ்த்துமாறு போல, இறைவனும் ஆன்மாக்களினிடத்துப் பிரிப்பின்றித் தங்கி நின்றே