பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

பன்னிரு திருமுறை வரலாறு


நாம் சேந்தன் அளித்த களியமுதை யுண்ணச் சென்றமையால் நீ நடத்தும் வழிபாட்டிற்கு வரத் தாழ்த்தோம்" என்று கூறி மறைந்தருளினர். அந்நிலையில் விழிப்புற்ற வேந்தன் சேந்தனுரைக் காண விரும்பி விடியற் காலத்தே தில்லைச்சிற்றம்பலப் பெருமானை வணங்கச் சென்றவன், பொன்னம்பலத்திற் களியமுது சிந்திக் கிடத்தலைக் கண்டு தான் கண்ட கனவின் உண்மையைத் தில்லைவாழந்தணர் முதலிய எல்லார்க்குந் தெரிவித்தான். அதனையுணர்ந்த பலரும் சேந்தனராகிய அடியவரைக் கண்டு வழிபட வேண்டுமெனப் பெரிதும் விருப்புற்றிருந் தனர். மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் மழை பெய்தமையால் திருத்தேர் சேற்றிலழுந்தி ஓடாது நின்ற பொழுது சேந்தா தேர்நடக்கப் பல்லாண்டு பாடுக என்றதொரு வானுெலி எல்லாருங் கேட்கும்படி தோன்றி யது. தேரிழுக்கும் அடியார் குழுவில் நின்ற சேந்தனர் மன்னுகதில்லை வளர்கநம் பத்தர்கள் எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். வடம் பிடிக்காமலே தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இவ்வற் புதத்தைக் கண்டார் அனைவரும் சேந்தனரது பேரன்பின் திறத்தை எண்ணி நெஞ்சம் நெக்குருகினர். இதுவே திருவிசைப்பா ஆசிரியராகிய சேந்தனுரைக் குறித்து நெடுநாட்களாக வழங்கப்பெற்று வரும் கதை.

சேந்தன் என்ற அடியவர் தில்லையிற் கூத்தப் பெருமானுக்குக் களியமுது அருத்திய பேரன்பின் திறத்தை

பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து வேந்தன் றனக்கன்றி யாட்செய்வதென்னே விரிதுணிமே லாந்தண் பழைய அவிழையன்பாகிய பண்டைப் பறைச் சேந்தன் கொடுக்க அதுவுந் திருவமிர் தாகியதே' (26)

என வரும் கோயிற்றிருப்பண்ணியர் விருத்தத்தில் நம்பி யாண்டார் நம்பிகளும்,

  • அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை

அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனுர்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற் சேந்தனர் செய்த செயல்.” (33)

என வரும் திருக்களிற்றுப் படியாரில் உய்ய வந்த தேவ நாயனரும் முறையே பரவிப் போற்றியுள்ளார்கள்,