பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 373

பருகியருந்தமிழ் மாலை பகரவருங் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை ' என வருந்தொடரால் இவ்வாசிரி யரே உலகினர்க்கு விளங்க எடுத்துரைத்தமை காண்க.

உலக மக்களனைவரும் கண்ணயர்ந்துறங்கும் நடுயாமப் பொழுதிலே ஒன்றிய சிந்தையுடன் சிவயோக நிலையிலமர்ந் திருந்து எல்லாம் வல்ல சிவபெருமானை நினைந்துபோற்றி ஞாயிற்றினுெளியும் கண்ணுெளியும் ஒருங்கியைந்தாற் போன்று அப்பெருமானது திருவருளில் ஒற்றித்து இன் புறும் நிலையில் தாம் திருவிசைப்பாப் பாடிய திறத்தினை,

ஒருங்கிருங்கண்ணின் எண்ணில் புன்மாக்கள் உறங்கிருள் நடுநல் யாமத்தோர் கருங்கணின்றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்

கலந்தெனக் கலந்துணர் கருவூர் தருங் கரும்பனைய தீந்தமிழ்மாலை ' என வருந் தொடராற் கருவூர்த் தேவர் தெளிவாகக் கூறி யுள்ளார். நீர் கலந்த பாலை நெருப்பில் வைத்துக் காய்ச்சுங் கால் நீர்முழுவதுஞ் சுண்டிப்போகப் பால் முன்னினும் பன்மடங்கு இன்சுவை பெறுதல்போல இறைவனது திருவருளாகிய தீயின் முன்னர்த் தம்பாலுள்ள நீரனைய தீவினை அறவே கெட்டொழியப் பாலனைய புண்ணியம் நன்ஞானமாகிய இன்சுவையுடையதாய் விளங்குமாறு தாம் சிவயோக நெறியில் ஒழுகிய திறத்தினையும், அந்நிலையில் இறைவன் யாவராலும் உணர்தற்கரிய தனது நுண்ணிய தன்மையினை அடியார்க்கெளிவரும் பெருங்கருணைத் திற மாகிய எளிமையினுள்ளே அடக்கிக் கொண்டு எளிவந்து தோன்றித் தம் கண்ணினுட் கருவிழியெனக் கலந்து அகலாது நின்று தனது திருவருட் கோலத்தைக் காட்டி யருளிய திறத்தினையும்,

பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்

பாவமுன் பறைந்து பாலனைய புண் ணியம் பின் சென் றறிவினுக் கறியப்

புகுந்ததோர் யோகினிற் பொலிந்து நுண் ணியை யெனினும் நம்ப நின் பெருமை துன்னிடையொடுங்க நீ வந்தென் கண்ணினுண் மணியிற் கலந்தனை கங்கை கொண்ட சோழேச் சரத் தானே, எனவரும் திருப்பாடலில் அழகு பெற விரித்துரைத் துள்ளார்.