பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

பன்னிரு திருமுறை வரலாறு


கண்ட ராதித்தர் தாம் பாடிய பதிகத்தின் திருக்கடைக் காப்பில் சோழநாட்டை ஆட்சிபுரியும் முடிவேந்தராகத் தம்மைக் குறிப்பிட்டுள்ளார். உத்தமசோழன் புதல்வராகிய இரண்டாங் கண்ட ராதித்தர் இளவரசராகக்கூட இருந்த தில்லை. முதற் கண்ட ராதித்தர்க்கு மேற்கெழுந்தருளிய தேவர் எனவும் சிவஞான கண்டராதித்த ரெனவும் வழங்கும் பெயர்கள் சிவஞானமுடையவராய்த் திருவிசைப் பாப் பாடிய ஆசிரியர் அவரே யென்பதனை வலியுறுத்து கின்றன. இங்ங்ணம் போற்றப் பெறுஞ்சிறப்பு இரண்டாங் கண்டராதித்தர்க்குரியதாக வழங்கினமைக்கு எத்தகைய சான்றுமில்லை. ஆகவே முதற் பராந்தக சோழன் தில்லை அம்பலத்திற்குப் பொன்வேய்ந்த திருத்தொண்டினைப் போற்றும் திருவிசைப்பாவைப் பாடிய ஆசிரியர் அவ் வேந்தனுடைய இரண்டாம் புதல்வராகிய முதற் கண்ட ராதித்த சோழரே யாவரென்பது நன்கு தெளியப்படும்.

சு. வேணுட்டடிகள்

வேணுடென்பது, தென் திருவாங்கூர்ப் பகுதிக்குரிய பழம் பெயராகும். செந்தமிழ்சேர் பன்னிரு நாடுகளுள் இவ் வேளுடும் ஒன்று. இந்நிலப் பகுதியை ஆண்ட அரசர்கள் வேணுட்டடிகளெனக் கல்வெட்டுக்களிற் குறிக் கப்பட்டுள்ளனர். எனவே திருவிசைப்பா ஆசிரியருளொரு வராகிய வேணுட்டடிகளென்பார் தென்திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள வேணுட்டில் அரசர் குடும்பத்திற் பிறந்து இறைவனை இன்னிசைத் தமிழாற் பரவிப் போற்றிய குறு: நில மன்னரெனக் கொள்ளுதல் பொருந்தும்.

ஒன்பதாந் திருமுறையில் வேணுட்டடிகள் பாடியதாக ஒரு திருப்பதிகமே யுளது. தில்லைச் சிற்றம்பலவனைப் போற்றுவதாக அமைந்த இத்திருப் பதிகத்திற் பத்துப் பாடல்கள் உள்ளன. தில்லையில் நடம் பயிலும் கூத்தப் பெருமாளுேடு உரையாடும் முறையிலமைந்த இத்திருப் பதிகம், பழமொழிகள் பலவற்றைத் தன்பாற்கொண்டு விளங்குகின்றது. வேப்பிலையும் வாழைக் கச்சையும் கசப்புடையனவாயினும் அவற்றை உலகத்தார் விரும்பி

1. திருவாங்கூர் கல்வெட்டுத் தொகுதி V. 124-ம் మcమిల4ు வேணுட்டடிகளையும் எனக் குறிக்கப்பெற்றுள்ளமை காண்க.