பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

பன்னிரு திருமுறை வரலாறு


திடுக்கிட்டு, நீ தில்லையம்பலத்தின்கண்னே திருநடம் செய் தலைப் பார்த்திருந்தும் உயிர் தாங்கும் ஆற்றலற்றவளா யினேன். அம்பலத்திலே நினக்குத் தொண்டு புரிவோ மென்று சொல்லிச் சூழ்ந்து நிற்கும் நஞ்சூட்டிய கொடியவர் களாகிய தேவர்களை உடனே விலக்கி விட்டு நின்பால் அன் புடைய பூதகணங்கள் நின்னைச் சூழ்ந்து பாதுகாத்து வர நினது பிரிவாலுளதாகிய எனது பசலைநிறந் தீரும்படி எங்கள் வீதி வழியே எழுந்தருளி வருவாயாக’ எனத் தலைவி யொருத்தி கூத்தப்பெருமான வேண்டுவதாக அமைந்தது,

அம்பலத்தருநடம் ஆடவேயும்

யாதுகொல் விளைவதென்றஞ்சி நெஞ்சம் உம்பர்கள் வன்பழியாளர் முன்னே

ஊட்டினர் நஞ்சையென்றேயு முய்யேன் வன்பெரும் படையுடைப் பூதங் சூழ

வானவர் கணங்களை மாற்றியாங்கே என்பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே என்ற திருவிசைப்பாவாகும். பழிவிளைக்கும் பகைவராயினும் ஒருவரது முன் நின்று நஞ்சினை உண்ணும்படி வேண்ட மாட்டார்கள். கீழ்மக்களும் செய்ய வொருப்படாத நஞ்சூட்டுந் தீச்செயலைத் தம்மையாளும் கடவுளிடத்தே செய்ய உயர்ந்தோரெனப்படும் தேவர்களும் மனந் துணிந்தனரே எனவருந்துவாள் 'உம்பர்கள் வன்பழியாளர்' என்று இகழ்ந்தாள். தேவர்கள் நஞ்சூட்டிய செய்தியைக் கேட்டபொழுதே உயிரற்றவளாயினேன் எ ன் பா ள் 'ஊட்டினர் நஞ்சையென்றேயும் உய்யேன்” என்ருள். தேவர்கள் உண்பிக்க நஞ்சையுண்ட பெருமான் என் கண் காணத் தில்லையம்பலத்தே ஆடல்புரியக் காண் கின்றேனயினும் அவனுக்கு ஊட்டிய நஞ்சு, ஏனைய நஞ்சுபோல இதுகாறும் அவன் திருமேனிக்கு வருத்தந் தராதாயினும் ஒருகால் உள்ளேயேயிருந்து நாளடைவில் அவன் திருமேனிக்கு இடர் விளைத்தலுங்கூடுமே யென்று ஏங்குகின்றேனென்பாள் அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாதுகொல் விளைவதென்று நெஞ்சம் அஞ்சி உய்யேன் என் ருள். அன்பர் போன்று கூடியிருந்து இடர்விளைக்கும் வானவர்கள் தம் பெருமான இன்றும் சூழ்ந்து போற்றி நிற்பதறிந்து வருந்தியவள், அத்தகைய தீயோரை விலக்கி அவரால் வருந்தீங்கினைப் போக்கிப் பாதுகாக்க வல்ல