பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பன்னிரு திருமுறை வரலாறு


தில்லைமூதுரிற் சென்று சேர்ந்தார். தில்லைத் திருவீதியினே வணங்கி உள்ளே புகுந்து சிவகங்கையில் நீராடி இறைவன் திருநடம்புரியும் அருள்நிலையமாகிய பொன்னம்பலத்தைக் கண்டு வணங்கினர். திருப்பெருந்துறையில் குருந்தடியிலே தமக்கு உபதேசிததருளிய அருட்கோலமே திருச்சிற்றம்ப லத்திலே வருக என அழைக்கும் முறுவற் குறிப்புடன் திகழ் தல் கண்டு மனமுருகித் தொழுது திருவாசகப் பாமாலைகளாற் பரவிப்போற்றினர். அங்கே அம்பலவன் தோற்றுவித்தருளிய அருள்வாக்கின்படி தில்லைப்பதியின் கீழ்த்திசையிலேயுள்ள தவவனத்தையடைந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.

ஈழநாட்டிலிருந்து வந்த புத்தர் சிலர், தில்லையை அடைந்து, தில்லை மூவாயிரவரை ஏழு நாட்களில் வாதத்தில் வெல்வதாகக் கூறி, வாதுக்கழைத்தார்கள். அந்நிலையில் கூத்தப்பெருமான், தில்லைவாழந்தணர்களுக்குக் கனவிலே

வே ே ஐ ஒ :: 经 : به همیه و میم. مته + s rg 站 தோன்றி வாதவூரனே அழைத்துவந்து புத்தருடன் வாது செய்வீராக’ எனக்கூறி மறைந்தருளிஞர். தில்லை மூவாயிச

வரும மனமகழதது வாதவூரடிகளை அணுகி நின்று புத்த

ருடன் வாது செய்தற்கு வருதல் வேண்டும்' என அழைத் தார்கள். சித்தத்தைச் சிவன் பாலே வைத்த வாதவூரர் ' வரவியலாது ' என மறுத்தார். அந்தணர்கள் மனக்கவலை யுடன் மீண்டனர். சிவபெருமான் மீண்டும் அவர்கள் கனவிலே தோன்றித் திருப்பெருந்துறையிற் குருந்தமரத் தின் கீழ்க் குருவாகத் தோனறி வாதவூரரை ஆட்கொண்ட முறைமையினையும், மாணிக்க மணிபோலும் இன்னிசைத்

  • 驾 3. 必 幻 尔 # * : ు. . ఫ్ ఫీ సో. தமிழ்ப் பாடல்களால் தம்மைத் துதித்தமை பற்றி அவர்க்கு மாணிக்கவாசகன் என்ற பெயர் தந்து தாம் சிறப்பித்த

ః శ్రీకి ఖో 烹 செய்தியையும் எடுத்துரைத்து, அவனே மாணிக்கவாசகன் * ...? . པཧང་ཏི་ >ה :க 器、盛 என்று அழையுங்கள், வருவான் என அறிவுறுத்தி யருளினர்.

இறைவன் அறிவுறுத்த வண்ணமே தில்லைவாழந் தணர்கள் மாணிக்கவாசகரை அணுகி அழைத்தார்கள். சிவயோக நிலையில் அமர்ந்த மாணிக்கவாசகர், இறைவனது திருவருட் குறிப்பு இதுவென உணர்ந்து தில்லை வாழந்தணர் களுடன் போந்து தில்லைச் சிற்றம்பலவன திருவடிகளைத் தொழுது போற்றி, அறிஞர்கள் வந்து குழுமிய பட்டிமண்ட

છ . ※ شد سه ماه مه - :్యః ” Aه د په عييييrss i જૂ 劉 பத்திலே வந்தமர்ந்தார். ஈழநாட்டிலிருந்து வந்த புத்தர்களே