பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 பன்னிரு திருமுறை வரலாறு

திசை நோக்கிச் சென்ருர், செல்லும் வழியில் திருக் கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரை யடைந்து திருவேகம்பப் பெருமானே இறைஞ்சிப் போற்றி அந்நகரிலுள்ள சிவயோகியர்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையை யடைந்து புரமெரித்த பெருமான வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடி யருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூ ைவந் தடைந்தார். எல்லா வுலகங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்தியற்றியருளும் கூத்தப் பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்த சிவயோகியார், பசுகரணங் கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கி யெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வில்ை சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையில்ை அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.

தில்லைத் திருநடக் கண்டு மகிழ்ந்த சிவயே கியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரிவில் நீராடி அதன் தென் கரையினை யடைந்து, உமையம்மையார் பசுவின் கன்ருக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம் முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவடுதுறையினை

யணுகித் திருக்கோயிலே வலம்வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காத

"ني

தொரு கருத்துத் தம் முள்ளத்தே தோன்ற அங்கே தங்கி யிருந்தார். ஆவடுதுறை யிறைவரை வ: படுதலில் ஆராத பெருங் காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை யகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள பொழி

娅 லிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனை எதிரே கனடா. அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்று

兹 ) 9 ، ۔ ۔ ۔ ۔ ۔:... ? ، ہ ? を # தொட்டு ஆனிரை சமயககும குடியிற் பிறந்த ஆயணுகிய மூலன எனபான அங்குத் தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூறறுவன் வந்து கவர்ந்து கொள்ள உயிர் நீங்கி அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்தாளுக, அவளுல் மேய்க்கப்பெற்ற