பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 பன்னிரு திருமுறை வரலாறு

இவ்வுலகிற் சிவயோக நில்ையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்களை அருளிச் செய்து, தமிழ் மூவாயிரமாகிய இத்திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவ பெருமான் திருவருளாலே திருக்கயிலையை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப்பெற்று இனி திருந் தார். திருமூலர் அருளிய திருமந்திரமாலை நலஞ்சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழி மாலையாகத் திகழ்கின்றது.

இவ்வாறு சேக்கிழார் பெருமான் திருமூலரது வரலாற்றினை விரித்துக் கூறியுள்ளார். பெரியபுராண ஆசிரியர் விரித்துக் கூறிய இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமூலநாயனர் அருளிய திருமந்திர மாலையில் நூலாசிரியராகிய அம்முனிவர் தம்வரலாறு கூறும் முறையிற்பாடியருளிய திருமந்திரப்பாடல்கள் அகச்சான்று களாக அமைந்துள்ளன.

மூலனுடம்பிற் புகுந்து தமிழ் மூவாயிரம் அருளிய முனிவர்பிரான், திருக்கயிலாயத்தில் தந்தியெம் பெருமான் பால் ஞானுேபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் என்றும், அவர் பொதியமலையில் எழுந்தருளிய அகத்திய முனிவரைக்கண்டு அளவளாவும் விருப்பம் உடையராய்த் தென்றிசை நோக்கிச் செல்லும் வழியில் சாத்தனுரையடுத்துக் காவிரியின் தென்கரையிலுள்ள சோலையில் ஆக்களை மேய்ப்போளுகிய மூலன் என்னும் பெயருடைய இடையன் இறந்துபட அந்நிலையில் அவளுல் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனுடம்பைச் சுற்றிக்கதறி வருந்தின என்றும், அப்பசுக்களின் துயரத்தை நீக்கத் திரு வுளங்கொண்ட அருளாளராகிய சிவயோகியார், தம் உடம் பினைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டுத் தாம் கற்றறிந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) என்னும் சித்தித்திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து திருமூலராய் எழுந்தார் என்றும் திருத்தொண்டத் தொகைக்கு வகை நூல் செய்த நம்பியாண்டார் நம்பிகளும் விரிநூல் செய்த சேக்கிழார் அடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்குத் திருமூலர் என வழங்கும் இப்பெயர் அவர் மூலனுடம்பிற் புகுந்தபின்னரே உளதாயிற்று