பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல நாயஞர் காலம் 盛篮驶

தமிழகம் சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களது ஆட்சிக்கு உட்பட்ட தாய், மூன்று தனி நாடுகளாய் விளங்கியதென்பது, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு : 'தொல்-செய்யுளியல்-சூ.-79 எனத் தொல் காப்பியனர் தமிழ்நாட்டினைக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும். சேர சோழ பாண்டிய நாடுகளாகிய இவை முறையே குடபுலம், குணபுலம், தென் புலம் எனவும் வழங்கபபடடன.

கடைச்சங்க காலத்திறுதியிற் சேர வேந்தர்க்குரிய குடபுலம் மலைநாடு கொங்கு நாடு என இரு பகுதிகளாகவும், சோழவேந்தர்க்குரிய குணபுலம் சோழநாடு தொண்டை நாடு என இரு பகுதிகளாகவும் பிரிந்து தனித்தனி நாடுகளாயின. இவ்வாறு தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்ட லம், கொங்கு மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித்தனி ஆட்சியில் நிலைபெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி. பி. மூன் ரும் நூற்ருண்டினை ஒட்டியதாதல் வேண்டும். இவ்வாறு தமிழகம் ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து இருந்த செய்தியைத் திருமூலர் தாம் அருளிச் செய்த திருமந்திரத் தில் குறிப்பிடுதலால், அந்நூல் தோன்றிய காலம் கி. பி. மூன்ரும் நூற்ருண் டிற்குப் பிற்பட்டதென்பது ஒருவாறு துணியப்படும்.

கொங்குநாடு சேர வேந்தரது ஆட்சியிலிருந்து விலகித் தனியுரிமை பெற்ற அந்நாளில் அந்நாட்டினை அடுத்துள்ள புறநாடுகளிலிருந்து தமிழரல்லாத அயலவர் பலர் குடியேறத் தொடங்கினர். நாட்டில் அரசியலாட்சிக்கு உட்படாத அறைபோகு குடிகளும், வழிப்போவோரைத் துன்புறுத்திப் .ெ ப ரு ள் கவரும் ஆறலைப்போரும் ஆங்காங்கே இடம் பெற்றனர். அதல்ை அந்நாட்டில் மக்கள் அமைதியாகப் போக்குவரவு புரிதற்குரிய பாது காப்பு இல்லாது போயிற்று. வழியபோவோர் தம் கையிலுள்ள பொருள்களோடு தாம் உடுத்துள்ள ஆடையினையும் பறிகொடுக்க வேண்டிய அவல நிலைக்கு உள் ளாயினர். இங்ங்னம் ஆறலைப்போர் பல்கி வாழ்ந்த கொங்கு நாட்டிற் புதியராய்ச் சென்ருேர் பாதுகாப்பற்ற நிலையிற் பெரிதும் வருத்தமுற்ற செய்தியை,