பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 427

" மூலன். தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் சுந்தர வாகமச் சொன் மொழிந்தானே " (101) எனவரும் இந் நூலின் பாயிரப் பாடலால் அறியப்படும்.

சைவ சமயத்துட் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளையும் செந் தமிழ்ப் பாடல்களால் அறிவுறுத்த எண்ணிய திருமூலர், நாற்சீ டி நான்கு கொண்ட கலிவகை யாப்பினுல் இத்திருமந்திர மாலையை அருளிச்செய்துள்ளார். ஒற்று நீக்கி எழுத்து எண்ணுங்கால் அடிதோறும் பன்னிரண் டெழுத்தும் ஈற்றடி நேரசையினைக் கொண்டு தொடங்கியதாயின் பதி கனுர் எழுத்தும் பெற்று வெண் டளை பிழையாது வருவது இத் திருமந்திரயாப்பாகும். செப்பலோசை தழுவிய இக் கலிப்பாவகை திருமூலர் திருமந்திரத்தில்தான் முதன் முதற் காணப்படுகின்றது. எனவே இதனைத் திருமந்திர யாப்பு என வழங்குதல் தகும்."

இந் நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருமந்திரமாலை என்பதாகும். ஞான முதல் நான்கு மலர் நற்றிரு மந் திர மாலை எனச் சேக்கிழாரடிகள் இந் நூற் பெயரைக் குறித் தருளிஞர். மூலர் திருமந்திரமாலை என்ருர் உமாபதிசிவம். ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் (திருமந்-85) எனவும், மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை, உறைப் பொடுங்கூடிநின் ருேதலுமாமே ' (திருமந்-86) எனவும் இந் நூற்பாயிரம் கூறுதலால், இந்நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் திருமந்திரமாலை என்பது நன்கு தெளியப்படும். இந்நூல், மூவாயிரந் தமிழ்ப்பாடல்களை யுடைமைபற்றித் * தமிழ் மூவாயிரம் என வழங்குதலும் உண்டு. முன்னிய அப்பொருண் மாலேத் தமிழ்மூவாயிரஞ் சாத்தி ' என்பது பெரிய புராணம்.

இந்நூல், தொல்காப்பியனர் கூறிய எழுநிலத்து எழுந்த செய்யுட்களுள் மறைமொழிகிளந்த மந்திரத் தான3 செய்யுளின் பாற்படுதலின், திருமந்திரம் என

1. பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதி பக்கம் 395. 2. விபுலானந்தர் - யாழ் நூல் - பக்கம் 231. 8. தொல்-செய்யுளியல் சூ-165.