பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

பன்னிரு திருமுறை வரலாறு


திருமந்திரத்தின் பாயிரப் பகுதியிலுள்ள 112 பாடல் களில் 67 பாடல்களே திருமூலர் வாக்கென்றும், ஏனைய 48 பாடல்களும் இடைச் செருகல்கள் என்றும், அவற்றைத் திருமூலருடைய மாணுக்கர்கள் பாடியிருத்தல் கூடு மென்றும் கருதுவாரு முளர்.' திருமந்திர நூலின் தொடக் கத்திலமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களும், ஆசிரியர் தமது குருமரபின் வழிமுறை கூறும் குருபாரம்பரியமும், ஆசிரியர் தாம் இந்நூலை இயற்றுதற்குரிய இயைபினப் புலப்படுத்தும் முறையில் தமது வரலாற்றினைத் தாமே கூறுவதாக அமைந்த திருமூலர் வரலாறும், ஆசிரியர் கூறும் அவையடக்கமும் ஆகிய பகுதிகள், இந்நூலின் தொடக்கத்தே ஆசிரியர் வாய்மொழியாக விரித்துரைக்கத் தக்க பாயிரப் பொருள்களாதலின், இவை திருமூலநாயனர் வாக்காகவே கொள்ளத்தக்கன என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

சிந்தைசெய் தாகமம் செப்பலுற்றேனே (திருமந்திரம் -73)

ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே' { 6్క క్షీ}

சேர்ந்திருந்தேன் சிவளுவடுதண்டுறை { ഒു. 79) இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி { 6. 80} என்ன நன்ருக இறைவன் படைத்தனன் தன் னை நன் ருகத் தமிழ்ச்செய்யுமாறே { శఙ్క 81) நானுமிருந்தேன் தற்போதியின் கீழே ( ഒു. 82)

என்ருங்கு இந்நூலாசிரியர் தம்மைப்பற்றித் தன்மை யொருமையில் வைத்துக் கூறும் வ் அகச்சான்றுகளேப் பின் வந்தோர் கூற்ருக ஒதுக்கித் தள்ளுதல் சிறிதும் அடாத தொன்ரும். திருத்தொண்டர் புராண ஆசிரிய சாகிய சேக்கிழார், திருமூலர் வரலாற்றினை விரித்துரைத் தற்குத் திருமந்திர நூலில் ஆசிரியர் கூற்ருக அமைந் துன் எ இத்திரும் பாடல்களையே ஆதாரமாகக் கொண்டுள் ளார் என்பது, இத்திருமந்திரப் பாடல்களையும் திருமூல நாயனர் புராணத்தி ையும் ஒப்புநோக்கிப் பயின்வார்க்கு இனிது விளங்கும்.

இனி இப்பாயிரத்திறுதியில் திருமந்திரப்பாடல் தொகையினையும் பொருட்சிறப்பினையும் கூறும் 99, 100-ஆம்

જન્મઃ s:વિરુદ્ધ.—૮:જસ્વ૬૮

1. மாவை. விசுவநாத பிள்ளையவர்கள் வெளியிட்ட திருமத் திரப் பதிப்பில் அறிஞர் ரமண சாஸ்திரியாரவர்கள் எழுதிய முகவுரை.