பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 垒垒留

வேடம், அபக்குவன், பக்குவன் என்ற தலைப்புக்களில் வைத்து ஞான சாதனங்கள் விரித்துரைக்கப் பெற்றன.

ஆன்மாக்கள் உய்தி பெறுதற் பொருட்டு இறைவன் தன் அடியார் திறத்தே நிகழச்செய்யும் தச காரியம் என்னும் பத்து வகைச் செயல்களும், இத் தந்திரத்திலும் பின்வரும் ஏழு, எட்டு, ஒன்பதாந் தந்திரங்களிலும் கூறப் படும் பொருள் களால் உணர்த்தப்பெறுகின்றன.

ஏழாந்தந்திரம், ஆருதாரம் முதல் இதோபதேசம் ஈருக முப்பத்தெட்டு உட்பிரிவுகளையுடையதாகும். இதனுட் கூறப்படும் பொருள்களுள் ஆருதாச நிலைகள், சிவலிங்க பேதங்கள், அருளொளி, குருலிங்க சங்கம வழிபாடு, ஆதித்தர் வகை, ஐம்பொறிகளையடக்கும் முறை, சற்குரு இதோபதேசம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன வாகும். இவை மேற்கு றித்த தச காரியங்களுள் சிவரூபம், சிவ தரிசனம் என்னும் இரண்டையும் விளக்குவன. போசன விதி, பிட்சா விதி, பூரணக் குகைநெறிச் சமாதி,

சமாதிக்கிரியை,விந்துச்சயம் என்பன, ஞானம் பெறுதற்குத் துணையாகவுள்ள நல்லொழுக்க நெறிகளை அறிவுறுத்து வனவாகும். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுள் வைத்து அண்டலிங்கம் முதலிய அறுவகை இலிங்கங்களை யும் கண்டு வழிபடுதலும், அதுளொளிக்குள் ஒடுங்கியிருந்து குரு லிங்க சங்கமம் என்னும் மூன்றிடங்களிலும் சிவபெரு மானை வெளிப்படக்கண்டு வழிபடுதலும் ஆகிய இவை, அகமும் புறமுமாகச் செய்தற்குரிய வழிபாடுகள் எனச் சைவ நூல்கள் கூறும். ஐந்திந்திரியம் அடக்கும் முறை, கூட வொழுக்க நீத்தல், கேடு கண்டிரங்கல் என்ற தலைப்புக்களிலுள்ள திருமந்திரப் பாடல்கள், நல்லொழுக்க நெறியில் நின்று இறைவனே வழிபடுவோர்பால் குற்றங்கள் நீங்க இன்றியமையாது இருத்தற்குரி நற்பண்புகளை விளக்குவனவாகும். இத் தந்திரத்தின் இறுதியிலுள்ள இதோபதேசம் என்ற பகுதி பொதுவாக உலக மக்களனை வரும் சிறப்பாகச் சிவநெறிச் செல்வர்களும் அன்புடன் கடைப்பிடித்தொழுகி உய்தி பெறுதற்குரிய நல்லுரைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது.

...'

செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உ ைமின் கள் வாய்மையை

இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல வரனெறி நாடுமி னிரே. -(திருமந்திரம்-2103)