பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

பன்னிரு திருமுறை வரலாறு


கள் தம் உடம்பு நீங்கி வேருேருடம்பிற் சென்று மீளுதலும் உவமையாகும். குட ஆகாயம் குடம் உடைந்தவிடத்து ஆகாயத்தோடு கூடுதல் என்றது, உயிர் சூக்கும உடம்பை விட்டுப் போதற்கு உவமையாகும். இவ்வுவமைகள்,

நாகமுடலுசி போலு நல் லண்ட ச மாக நளுவிற் களுமறந் தல்லது போகலுமாகு மரனரு ளாலே சென் றேகு மிடஞ்சென் றிருபய னுண்ணுமே. (2132) உண்டு நரக சுவர்க்கத்தி லுள்ளன கண்டு விடுஞ் சூக்கம் காரணமாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோற் பிண்ட மெடுக்கும் பிறப்பிறப் பெய்தியே. (2133) எனவரும் திருமந்திரப் பாடற் பொருளைப் பின்பற்றி அமைந்தனவாகும்.

திருமூலநாயனுர், மாயையின் காரியமாய் உயிர்நிலை பெறுதற்கு இடனுகிய உடம்பினை மாயாபுரி 25, 28) என்ற தொடராற் குறித்துள்ளார். இத்தொடரை அடி யொற்றியமைந்தது, மாயா இயந்திர தனு (சூத்திரம் 3) என வரும் சிவஞான போதத் தொடராகும்.

" அறிவு விளக்கமில்லாத காலத்துப் பதி, மனைவி முதலிய புறப்பொருள்களைத் தனித்தனியே எனது எனது எனத் தற்கிழமைப் பொருளாகக் கூறிக் கொண்டு நின்ருற் போல, உனதல்லாத உன் கை கால் உடம்புகளைத் தனித் தனியே எனது' என்றும், அங்ங்ணம் அறிந்த பாச அறிவை என்னறிவு அது என்றும் தற்கிழமைப் பொரு ளாகக் கூறிக்கொண்டு நீ ஒரு பொருள் வேறு நிற்கின்ருய். ஏதுக்கள் முதலியவற்ருல் ஆராய்ந்து பார்ப்பாயாயின் அக் கைகால் முதலியன உயிராகிய உனக்கு வேருவன என அறிவுறுத்துவதாக அமைந்தது,

எனதென்ற மாட்டின் என தலா தென்னு துனதலா துன் கைகால் யாக்கை-எனதென்றும் என்னறிவ தென்றும் உரைத்துநீ நிற்றிகாண் உன்னிலவை வேரும் உணர்’

(சிவஞானபோதம்-வெண்பா-17) என வரும் வெண்பாவாகும். இது,

  • உன்னை யறியா துடலைமுன் நானென்ருய்

உன்னை யறிந்து துரியத்துற நின்ருய் (2279)