பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 49?

தேசிகர் இத்திருமந்திரத்தை மேற்கோளாகக் காட்டியிருத் தலால் இனிது விளங்கும்.

ஆணவமலம் ஒன்றேயுடைய உயிர்களை விஞ்ஞான கலர் எனவும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய உயிர்களைப் பிரளாயாகலர் எனவும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய உயிர்களைச் சகலர் எனவும் உயிர்களை மூவகையாகப் பகுத்துரைத்தல் சைவ சித்தாந்த மரபாகும.

மெய்ஞ்ஞானத் தானே விளையும் விஞ்ஞானகலர்க்

கஞ்ஞான வச்சகலர் க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம்

பின்னுணர்த்து மன் றிப் பிரளயா கலருக்கு

முன்னுணர்த்துந் தான்குருவாய் முன்,

(சிவஞானபோதம்-வெண்பா-Ai) எனவும்,

உரை தரும் இப்பசுவர்க்கம் உணரின் மூன்ரும் உயரும் விஞ்ஞானகலர் பிரளயா கலர்சகலர்

நிரையின் மலம் மலங்கன்மம், மலங்கன்ம மாயை

நிற்கும், முதலிருவர்க்கும் நிராதாரமாகிக்

கரையிலருட் பரன் துவிதா சத்திநி பாதத்தால் கழிப்பன் மலம், சகலர் க்குக் கன்ம வொப்பில்

தரையில் ஆசான்மூர்த்தி ஆதாரமாகித்

தரித்தொழிப்பன் மலம் சதுர்த்தா சத்திநி பாதத்தால்.

(சிவஞான சித்தியார்-சுபக்கம்-254) எனவும,

மூவகை ஆருயிர் வர்க்கம் மூலமலத்தார், கன்ம

மூலமலத்தார், மூன்று முடையாரன்றே,

தீவகமாம் என வுருவாய் வந்து நாதன்

திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால்

பாவனையால் மிகு நூலால் யோகப் பண்பால்

பரவிவரும் அவுத்திரியாற் பாசநாசம் மேவ அருளுதவும், அவுத்திரியிரண்டு திறகும் வியன்கிரியை ஞானமென விளம்புமாறே.

{சிவப்பிரகாசம 8)

1. இத்திருமந்திரம் இப்பொழுதுள்ள அச்சுப்புத்தகங்களில்,

இருவினை யொத்திட இன்னருட்சத்தி மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக் குருவினைக் கொண்டருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. (திருமந்திரம் 2262)

எனக் காணப்படுகின்றது.

32