பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 499

முத்தாந்தப் பாத மலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவும் உலகரெலாம் மூடராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்

பெருங் குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி. 268) எனவரும் சிவஞான சித்தியார் செய்யுள்,

சித்தாந்தத்தே சீவன் முத்திசித் தித்தலால் சித்தாந்தத் தே நிற்போர் முத்திசித்தித்தவர்

(திருமந்திரம் - 2394) என்னும் திருமூலர் வாய்மொழியினை மேற்கொண்டு கூறிய விளக்கமாக அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

" தான மியாக ந் தீர்த்தம் (277) எனவரும் சிவஞான சித்தியாரில் அரன் முனிலா தொழியில் உற்பவித்து ஞான நெறி யடைந்தடைவர் சிவனை என்ற தொடர், சரியை முதலிய சிவபுண்ணியங்களைச் செய்தவர் போகத்தில் விருப் புடையராயின், விசிட்டமான கன்மபரிபாகத்தாலே புரியட் டக உடலை யெடுத்துப் பொல்லாதென்ற சகல யோனிகளேப் புசித்துத் தொலைந்தவாறே பிரளயாகலராய்ப் பின்பு விஞ் ஞான கலராய் ஞானநெறியைத் தலைப்பட்டுச் சிவனடியை அடைவார்கள் என்பதனை அறிவுறுத்துவதாம். இது,

விஞ்ஞான கன்மத்தான் மெய்யட்டகங் கூடி யஞ்ஞான கன்மத்தாற் சகல யோனிபுக் கெஞ்ஞானமு மெய்தி யிடையிட்டு மீண்டுபோய் விஞ்ஞா ராய்ச் சிவ மேவுவ துண்மையே, (499)

என்னும் திருமந்திரப் பாடலை உளங்கொண்டு கூறிய விளக்கமாதல் அறியலாம்.

சிவஞானச் செயலுடையோர் கையில்தானம்

திலமனவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து புவமாயக் கடலினழுந் தா தவகை யெடுத்துப்

பரயோகந் துய்ப்பித்துப் பாசத்தை யறுக்கத் தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்

சரியை கிரியா யோகந் தன்னினும் சாராமே நவமாகும் தத்துவ ஞானத்தை நல்கி

நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே. (278) எனவரும் சிவஞான சித்தியார் விருத்தம்,

அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென் சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரில்லை யென்பது நிச்சயந் தானே, (1860)