பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதஆசடிகன் 慧覽

களின் நெற்றியிலே திருநீறு.சாத்திச் சிவபெருமான் மறைந் தருளினர்.

பின்பு வாதவூரடிகள் அடியார்குழுவில் வந்தடைந்து குருந்தின் கீழ்த் தெய்வபீடம் அமைத்து இறைவன் திருவடி களை வழிபட்டிருந்தார். இறைவன் தன்னை அன்பிளுற் பாடிப்போற்றிய அடியார்களுக்கு இரங்கி யருள்புரிவார் எனத்தெளிந்து நமச்சிவாய வாஅழ்க’ என்றெடுத்து ஞான வாசகம் பாடத்தொடங்கிஞர். திருப்பெருந்துறையில் இறைவன் திருவடிகளை வழிபட்டிருக்கும் நாட்களில் அற்புதப்பத்து, அதிசயப்பத்து, குழைத்தபத்து, சென்னிப் பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, புணர்ச்சிப்பத்து அருட்பத்து, திரு வார்த்தை, எண்ணப்பதிகம், திருவெண்பா, திருப்பள்ளி யெழுச்சி, திருவேசறவு, ஆனந்தமாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப்பத்து, திருப்பாண்டிப் பதிகம் ஆகிய பனுவல் களைப் பாடிப்போற்றினர்.

சிலநாட்களுக்குப்பின் இறைவன் பணித்தவண்ணமே திருத்தமாம் பொய்கையில் தீப்பிழம்பு தோன்றியது. அன்புடைய அடியார்களெல்லாம் அஞ்செழுத்தோதி அதனுள்ளே புகுந்தார்கள். சிவபெருமான் உமையம்மை யாருடன் விடைமீது தோன்றிக் காட்சியளித்தருளினர். அடியார்களனைவரும் சிவகணநாதர்களாயினர். புத்தர் களைப் புலியூரில் வாதில் வெல்லுதற் பொருட்டுத் திருவாத வூரனை இப்புவியில் தங்கச் செய்தோம். எமது பிரிவாற்ருது வருந்தும் வாதவூரனது வருத்தத்தைத் தணித்தற் பொருட்டே நும்மை இங்குச் சிலநாள் இருக்கப்பணித்தோம். மலநீங்கிய சிவஞானிகளும் மானுடவடிவத்துடன் இந்நில வுலகில் சிலநாள் தங்குவராயின் அவர்களை மலவாதனை மீளவும் வந்துதாக்கும் என்பது கருதியே பொய்கையில் ஞாளுக்கினியைத் தோற்றுவித்து துமது சரீரத்தை நீருக்கி இவ்வுடம்பினைத்தந்தோம் என இறைவன் சிவகனநாதர் களுக்கு அறிவுறுத்தி அவர்களுடன் மறைந்தருளினர். கொன்றை மரநிழலிற் சிவயோகத்தில் அமர்ந்திருந்த வாத ஆரடிகள், இந்நிகழ்ச்சியினை யோகக்காட்சியாலுணர்ந்து பொய்கைக்கரையையடைந்து இறைவனையும் அடியார் களையும் காணுது வருந்தி அழுதரற்றினர். பின் ஒருவாறு உள்ளந்தெளிந்து குருத்தமர நீழலையனுகி இறைவன்