பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாலவாயுடையாச் 545

இனித் திருவாலவாயிறைவர் பாடிக் கொடுத்தருளிய திருமுகப் பாசுரத்தின் பொருளை ஒரு சிறிது நோக்குவோ மாக, திங்கள் தங்கிய மதிலாற் சூழப்பட்ட மாடங்களே யுடைய கூடல் நகரத்திலே நிலைபெற்ற பால்போலும் வெண்ணிறச் சிறகுகளையுடைய அன்னங்கள் பயின்று வாழும் நீர்நிலையோடு கூடிய சோலை சூழ்ந்த திருவால வாயென்னுந் திருக்கோயிலிலே நிலை பெற வீற்றிருக்கும் இறைவனுகிய யான் வரைந்த இம்மொழியினை ப், பருவ காலத்து மேகத்தையொப்பப் பாவன்மையுடைய பெரும் புலவர்களுக்கு அன்புரிமையினுல் தன் பாலுள்ள பெரும் பொருளை அவர்கள் போதுமென மறுக்கவும் உரிமையோடு நிறையக் கொடுத்துப் புகழொளி பரவ நிறந்தங்கிய திங் களே யொத்த வின் ங்கும் வெண்கொற்றக் குடை நிழற்கீழ்ப் போர்ப்பரி செலுத்தும் ஆற்றல் மிக்க சோலன் காண்பா கை. பக்கத்தா ரியல்பறிந்து பழகும் இனிய பண்பிளுேடு யாழினை வாசிக்க வல்ல பாணபத்திர னென்பான் சேர மாளுகிய தன்னைப்போல என்பாற் பெருகிய அன்புடை யான். வேந்தர் பெருமாளுகிய தன்னைக் காண வேண்டு மென்னும் பேரார்வத்தால் அங்கு வருகின்ருன். ஈவோனும் ஏற்போனுமாகிய நூம் மிருவர் மாண்பினையும் நோக்கி அம் மாண்புக்குத் தக்க பெரும்பொருளைக் கொடுத்து அவனை என்பால் வரும்படி விடுத்தல் செய்யத் தகுவதாம்" என் பது இதன் பொருளாகும்.

பன்னிரண்டடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப் பாவாகிய இப்பாடலில், முதல் நான் கடிகளில் இதனைப் பாடிய தலைவனுகிய சிவபெருமானது சிறப்பும் அடுத்துள்ள நான் கடிகளில் அவ்விறைவனுற் பாடப்பெறும் புகழமைந்த பாட்டுடைத் தலைவராகிய சேரமான் பெருமாளது சீர்த்தியும் பின்னுள்ள நான் கடிகளில் இதனைப் பாடுதற்குக் காரண ராகிய பாண பத்திரனென்னும் அடியவரது அன்புரிமைச் சிறப்பும் அவருக்குப் பொருளைக் கொடுத்தனுப்புக என்னும் ஆணையும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

மதிமுடிக் கடவுளாகிய தன்னைப்போன்று மதிதவழும் மாடங்களோடு கூடி விளங்குவது கூடல் நகரமாகிய மதுரையென்றும், நிலனுவிற்றிரிதரும் நீண்மாடக் கூடலா ராகிய அந்நகர் வாழ்வார் புலணுவிற் பிறந்த சொற்புதி துண்ணும் மதி நலமுடையாரென்றும் விளக்குவார். மதி