பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாலவாயுடையார் 547

பித்தார். பகைவரொடு பொரும் போரிலே மாற்ருரது முடிமேல் அடிவைத்துப்பாயும் ஆற்றல்பெற்ற பரியைச் செலுத்தும் சேர வேந்தரது போர் வன்மையைப் புகழ்வார் செருமா உகைக்குஞ் சேரலன் என் ருர் போர்க் களத்திலே தொழில் புரிதற்குரிய பேராற்றல் பெற்ற தமது குதிரைக்கு எதிர்காலத்தில் நல்லக விளக்காகிய நமச்சி வாய மந்திரத்தை உபதேசித்துத் திருக்கயிலைக்குச் செலுத்தவல்ல உரவோன் என்பார், ஒளி திகழ்.செருமா வுகைக்குஞ் சோலன் ' என் ருரெனினும் அமையும். இவ் வாறு திருவாலவாயிறைவர் சேரமான் பெருமாளது புகழ்த் திறத்தை விளக்கிப் பாடிய இத்திருமுகப் பாசுரப் பொருளை யுளங்கொண்ட நம்பிய ரூரர், ' கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன் எனச் சேரமான் பெரு மா?ளத் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற் றினமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கதாகும்.

உலகத்தாரோடு அன்பாற் பழகி யாழிசைத்து இசை வளர்க்கும் பெருமை மிக்க பாணனுக விளங்குபவன் இப் பாணபத்திரன் ஆதலானும், வேந்தர் பெருமாளுகிய தன்னைப்போல் என்பாற் பெருகிய அன்புடையணுதலாலும், என்பாலன்புடைய நீ வி ர் இருவீரும் ஒருவரொருவரைக்கண்டு உரையாடி அள வளாவி மகிழ்தல் வேண்டுமாதலாலும், அவன் எனது ஆணையால் வேந்தனுகிய தின் னைக்கான வருகின்ருனென் பார், பண்பால் யாழ்பயில் பாணபத்திரன், தன் போல் என்பால் அன்பன், தன்பால் காண்பது கருதிப் போந்தனன் என்ருர், அறநெறியை முதலாகக்கொண்ட அரசியல் விளைவாலுண்டாகிய மாண்புடையது சேரமான் பெருமாள் பொருளாதலின், அதனை மாண்பொருள் என்றும், தான் சிறிதாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான் சிறிதாக வளர்ந்தோங்குதல் பொருளினியல்பு ஆதலின் அப்பொருள் மேன்மேலும்பெருகி மாட்சிமைப்பட அதனைப் பெறுவதற்குரிய தகுதியுடையவன் என்பால் அன்புடைய பாணபத்திரளுதலின் அவனுக்குக் கொடுத்தல் வேண்டுமென்பார், மாண்பொருள் கொடுத்து என்றும், மாண்பொருளெனவே உலகிற்பெரிதும் மாட்சிமையுடைய அரசாட்சியை அவனுக்குக் கொடுக்கச் சொல்வதாக எண்ணிப் பாணபத்திரனுக்கு நினது அரசாட்சியை வழங்கி