பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

பன்னிரு திருமுறை வரலாறு


வனே. எம்தந்தையே யெனப் போற்றி வழிபடும் உயிர் களாகிய எங்கள் மேல் பொறுத்தற்கரிய துன்பங்கள வந்து வருத்துங்கால் அவற்றை மாற்றி இவ்வுலகில் நிலை பெற வாழச்செய்து காப்பவனும் அவ்விறைவனே ஆவன் . ஞானமே திருமேனிய கவுடைய இறைன் நம்மால் அணுக முடியாத பரவெளியிலும் தேவருலகத்தும் உள் ளான் என்று சொல்லு வார் சொல்லுக, அப்பெருமான் எனது நெஞ்சமாகிய அணிய இடத்திலிருந்து அன்பர் களுக்கு அருள்புரிகின்ருன் என்றே யான் கூறுவேன் . கண்ணுதற் கடவுளாகிய சிவபெருமானுக்கு ஆட்பட்டமை யால் யானே தவமுடையேனுயினேன். அப்பெருமான இடைவிடாது எண் ணிப்போற்றுதலால் எனது நெஞ்சமே நல்ல நெஞ்சமாயிற்று. அவனது திருவருள் வழி நிற்றலால் காரண கரியத் தொடர்ச்சியாய்க் கரையின் றி வரும் பிறவித் தொடர்ச்சியை யறுத்தற் கெண்ணும் உறுதியுடை யேகுயினேன். உலகமெல்லாவற்றையும் ஆள்விப்பதும் உயிர்களின் பிறவி நோயைப் பொன்றக் கெடுப்பதும் ஈசனது திருவருளேயாகும். அத் திருவருளின் துணை கொண்டே மெய்ப்பொருளாகிய சிவபரம் பொருளை உள்ள வாறு கண்டு வழிபடும் நற்பேறுடையேனுயினேன். அடி யேற்கு எக்காலத்தும் எல்லாப் பொருளாகவும் நின்று துணை புரிவது அத்திருவருளேயாகும். என்றும் எனக் கினிமை தரும் பெருமாளுகிய இறைவனை வை. புநிதியாக என் மனத்துட் கொண்டு போற்றி வழிபடும் அடியே னுக்குக் கிடைத்தக் கரியது எதுவுமில்லை. இறைவனுக்கு ஆட்பட்டுத் தொண்டு புரிதலாகிய ஒன்றையே நினைந்து அதனையே உறுதிப் பொருளாகத் துணிந்து என் னுள்ளத் திற் கொண்டுள்ளேன். இறைவனே நினைந்த எனது நெஞ்சம் தனக்குரிய பெருஞ் சேமத்தைத் தானே தேடிக் கொண்டது. தேவர்கள் தம்முனர்வினுல் இறைவனைத் தியானித்து மலர் தூவி வழிபட்டும் அப்பெருமானுடைய திருவடியைத் தலைப்படும் ஆற்றலற்றவராயினா. வலியற்ற மனத்த ல் நினைந்திருந்து, மின்னலோடு விளங்கும் செவ்

1. அற்புதத் திருவந்தாதி 5 2. அற்புதத் திருவந்தாதி 6 .ே அற்புதத் திருவந்தாதி 7 4. டிெ § 器。 டிை is] 6. ഒു. 3.4 7.

டிை 14