பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

பன்னிரு திருமுறை வரலாறு


காணவல் லார் யாவர் ? என இவ்வாறு காரைக்கால் அம்மையார் இறைவனுக்கு ஆட்பட்ட மெய்யடியார்களின் இயல்பினை விரித்துரைக்கும் திருப்பாடல்கள் அவரது உள் ளத் துறுதியினை இனிது விளக்குவனவாகும்.

செம்மேனிப் பேராளனுகிய இறைவன் திரு மாலை வலப் பக்கத்திலும் உ ைமயம் மையாரை இடப்பாகத்திலும் கொண்டு விளங்கும் திருக்கோலத்தின் வனப்பினைக் குறித் தும், திருமிடற்றில் நஞ்சினையடக்கிய அப்பெருமான் செஞ் சடையில் திங்களையும் அதற்குப் பகையாகிய பாம்பினையும் கங்கையையும் சேர அணிந்த திறத்தைக் குறித்தும், அரவணிந்து தலையோடேந்தி ஊர் தோறும் பலி திரிவதும் பேய்கள் சூழ ஈம வ ைத்தே தீயேந்தி ஆடுவதுமாகிய செயல்களைக் குறித்தும் காரைக்காலம்மையார் இறை வனை நோக்கி உரையாடும் நிலையிற் பாடிய திருப் பாடல்கள் தன்மை உவமை முதலிய அணிகளுக்கும் நகை உவகை முதலிய சுவைகளுக்கும் சிறந்த இலக்கிய மாக விளங்குகின்றன. இறைவ, நின் திருவடிக்கு ஆளா கிய அந்நாளிலும் நினது திருவுருவத்தை நேரிற் காணு மலே நினக்குத் தொண்டுபட்டேன். நினக்கு பன்னுள் அடித்தொண்டு செய்து பழகிய இந்நாளிலும நினது திரு வுருவத்தினைக் காணப் பெற்றேனல்லேன். நும் பெரு மானுகிய இறைவன் எத்தகைய திருவுருவத்தையுடையான்' என்று என்னை நோக்கி வினவும் உலகத்தார்க்கு நினது திருவுருவத்தியல்பினை எவ்வாறு விளங்கச் சொல் வேன் நினது திருவுருவம் எவ்வுருவோ ? வானிடத்தே யியங்கும் பிறைத் திங்களே யணிந்த பெருமானே, ஏழுலகங் களே யும் கண்ணெனப் பாதுகாக்க வல்ல கடவுளே, உயிர்க்குயிராகிய நின்னே நின் திருவருளாற் காணப் பெற்று, என் தந்தையேயென்று துதித்து வணங்கி என்ன வியன் ற கைத்தொண்டுகளைச் செய்து மகிழேனுயின் அண்டங்களை யெல்லாம் ஆளும் உயர்ந்த பதவி தானே கிடைத்தாலும் அதனை ஒரு பொருளாக விரும்பமாட்டேன். இதுவே அடியேனது உள்ளக் கருத்தாகும் இறைவ நின் திருவடி சிறிது இடம் பெயருமாயினும் கீழுலகமாகிய பாதாளம் நில தளர்ந்து சிதறும் நின் திருமுடி சிறிதே அசையுமாயின் அண்டமுகடு பிளந்துபோம். கடகமணியப் பெற்று வீசியாடுதற்குரிய நின் கைகள் சிறிதசைந்தாலும்