பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் 545

யிலே அருட் கூத்தியற்றும் நிருத்தனரது திருக்கூத்தினை நேரேகண்டு மகிழ்ந்தார். பேராத காதலால் தாம் பாடிய செந்தமிழ் வெண்பாவாகிய மென்மலரால் அப்பெருமானை அருச்சித்துப் போற்றினர். தில்லைப் பெருமானதருள் பெற்ற ஐயடிகள், இறைவன் கோயில்கொண்டருளிய ஏனைத் திருத்தலங்கள் பலவற்றையும் பணிந்து திருத்தொண்டு செய்து அத்திருத்தலங்களை எவ்வுலகத்தவரும் புகழ்ந் தேத்தும் இனிமை வாய்ந்த ஒவ்வொரு தமிழ் வெண்பாவி ற்ை பாடிப் போற்றினர். இவ்வாறு செந்தமிழாற் சிவ நெறி வளர்த்த ஐயடிகள் காடவர் கோன் நாயனுர், அடியார் பலரும் இன்புறத் தமக்கு இயைந்த திருப்பணிகள் பல வற்றையும் நெடுங் காலம் செய்திருந்து பின்பு சிவலோ கத்து இறைபணிபுரியும் அடியார்களுடன் கூடிப் பரமர் திருவடி நிழற்கீழ் அமர்ந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வினைப் பெற்ருர் என்பது வரலாறு. இவ்வரலாற்றினைத் தொண்டர் சீர்பரவுவாராகிய சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்கள்.

காடவரென்பது, பல்லவ குலத்தார்க்கு வழங்கும் பொதுப்பெயர். பல்லவர்குடியிற் பிறந்து தொண்டை நாட்டினை யாளும் வேந்தர் பெருமானுக விளங்கினமையால் இவர் காடவர்கோன் என அழைக்கப்பெற்ருர். இவர் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு அரசு புரிந்தவரென்பது கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவர் ஐயடிகளார் ' எனச் சேக்கிழாாடிகள் கூறுதலாற் புலனும் காடவர்கோளுகிய இவர் அரசியல் வாழ் துன்பந்தருவதெனவுணர்ந்து அரசுரிமையைத் தன் புதவன்பால் ஒப்பு வித்து விட்டுப் பற்றற்ற சிந்தையராய்ச் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்த நாளில் இவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் ஐயடிகள் என் பதாகும். ஐயன் அடிகள் என்ற தொடரே ஐயடிகள் என்று மருவியதெனத் தெரிகிறது. எவ்வுயிர்க்குந் தலைவனுகிய இறைவனையும் அவனடியார்களையும் உலகினையாளும் அர சனையும் அடிகள் என்ற சொல்லாற் குறிப்பிட்டுப் போற்று தல் நெடுங்காலமாகத் தமிழகத்தில் நிலைபெற்று வரும் வழக்காருகும். இம்மரபின்படி ஆற்றல் மிக்க வேந்தராகவும் சிறந்த சிவனடியாதாகவுந் திகழ்ந்த காடவர்கோன் நாயனர் அடிகள் என்ற பெயரால் அழைக்கப்பெற்றமை பெரிதும் பொருத்தமுடையதேயாம். அரசியல் ஆட்சி

35