பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566

பன்னிரு திருமுறை வரலாறு


திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்ருர், வெள்ளை யானை யின் மீதமர்ந்து விசும் பிற் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வான் மீதெழுந்து வன்ருென் டர் ஏறிச் செல்லும் வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளே ப் பின் தொடர்ந்து சென்ற படைவீரர்கள், குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் என ஆல வரையிற் கண்டு பின் காணப்பெருது வருத்தமுற்ருர் கள். தம் வேந்தர் பெருமானத் தொடர்ந்து செல்ல வேண்டு மென்ற மனத்திட்பமுடையராய் உடைவாளினுல் தம் உடம்பை வெட்டி வீழ்த்து வீரயாக்கையைப் பெற்று விசும் பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்துச் சென்றனர். சோமான் பெருமாளும் சுந்தரரும் திருக்கயிலா யத்தின் தெற்கு வாயிலை யணுகிக் குதிரையிலிருந்தும் யானையிலிருந்தும் இழிந்து வாயில்கள் பலவற்றையுங் கடந்து திருவனுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரமான் பெருமாள் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு நின்ருர். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருமுன்னர் ப் பணிந் தெழுந்தார். கங்கை முடிக்கனிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை யிறைஞ்சுதற் பொருட்டுச் சேரமான் பெரு மாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்ருர் என விண்ணப்பஞ் செய்தார். சிவபெருமான், பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் சேரமானக் கொணர்க எனத் திருவாய்மலர்ந்தருளினர். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார்.

சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின் ருர், இறைவன் புன் முறுவல் செய்து சேரமான நோக்கி, இங்கு தாம் அழையாதிருக்க நீ வந்தது எது கருதி ' என வினவி யருளினர். அது கேட்ட சேரவேந்தர் இறைவனைப் பணிந்து " செஞ்சடைக் கடவுளே! அடியனேன் நம்பியாருரருடைய திருவடிகளைப் போற்றி அவர் ஏறிவந்த வெள்ளே யானைக்கு முன் அவரைச் சேவித்துக் கொண்டு வந்தேன். தங்களது திருவருட் பெருவெள்ளம் அடியேன முன்கொண்டு