பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58? பன்னிரு திருமுறை வரிாைறு

என்ற திருப்பாடாலால் சொலற்கரிய சூழலாய் விளங்கும் இறைவனது இயல்பினைச் சேரமான் பெருமாள் அறிவுறுத்தி iருளினம்ை நினைந்து போற்றத் தக்கதாகும்.

உலக உயிர்கள் ஆணும் பெண்ணுமாய் அன்பினுற் கலந்து உலகியல் நிகழ்த்தி இன்புற்று உய்யும் வண்ணம் உயிர்க்குயிராகிய இறைவன் அம்மையப்பணுகத் திருமேனி கொண்டு தோன்றி எல்லாவுயிர்களுக்கும் அருள் புரி கின்ருன் என்னும் உண்மையினை நம் த மி ழ க த் தே தோன்றி அப்பெருமானது திருவருள் நெறியாகிய சிவநெறியில் நின்ருெழுகிய செம்புலச் செல்வர்கள் அனை வரும் நன்குனர்ந்து வெளியிட்டுள்ளார்கள். அப்பெரு மக்கள் மேற்கொண்டொழுகிய சிவநெறியினைக் கடைப் பிடித்து ஒழுகிய சேரமான் பெருமாள் நாயனுர், தாம் இறை வனருளாற் கண்டுணர்ந்த மாதொருபாகர் திருக்கோலத் தியல்பினை,

வலந்தாள் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வல நீ றிடஞ்சாந் தெரிவலம் பந்திட மென் பல ந்தார் வலமிட மாடகம் வேல்வல மாழியிடம் கலந்தாழ் சடைவலம் தண்ணங் குழலிடஞ் சங்கரற்கே (65)

என்ற பாடலால் நம்மனுேர்க்கு விளங்க அறிவுறுத்து கின்ருர், எல்லாவுயிர்க்கும் இன்பத்தைத் தருதலாற் சங்கரன் எனப்போற்றப் பெறும் சிவபெருமானுக்கு வலப் பக்கத்துத் திருவடியில் அணியப் பெற்றுள்ளது ஆடவர் அணியாகிய வீரக்கழல், இடப்பக்கத்துத் திருவடியிலுள்ளது மகளிர்அணியாகிய பாதசாம். வலப்பக் கத்தே அணிவது பாம்பாகிய அணிகலன். இ. பக்கத்து ள்ளவை மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலன்கள். வலப்பாலிற் பூசுவது திருநீறு. இடப்பா லிற் பூசுவது செஞ்சாந்து. வலப்பால் திருக்கையில் ஏந்தியது தீ இடப்பால் திருக்கையில்ஏந் தியது பந்து வலப்பக்கத்தே பூண்பது எலும்பாகிய உலர்ந்த மாலை. இடப்பக்கத்தே பூண்பது பொன்ன ரி மாலை. வலம் ஏந்தியது வேற்படையாகிய சூலம், இடம் ஏந்தியது சக்கப்படை, வலப்பக்கத்தது தாழ்சடை. இடப்பக்கத்தது கருங்குழல் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும் இத் திருக்கோலத்தைத் தொன்மைக் கோலம் எனப் போற்றுவர் திருவாதவூரடிகள்.