பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584

பன்னிரு திருமுறை வரலாறு


கதிர் விரிகின்ற செஞ்ஞாயிறுபோன்று ஒளிர்வது இறைவனது சிவந்த திருமேனி, ஞாயிற்றைச் சூழ்ந் தொளிரும் ஒளிக்கற்றைகள்போல்வது அப்பெருமானது செஞ்சடை ஞாயிற்றின் கதிர்க்கு ஆற்ருதோடிய காரிருள் போன்று திகழ்வது நஞ்சக்கறையுடைய திருநீலகண்டம் அவ்விருளின் கீழ் விளங்கும் வெண்மேகம் போன்றது ஆப் பெருமான் திருமேனியிற் பூசப்பெற்றுத் திகழும் திரு வெண்ணிறு எனச் சோமான் பெருமாள் தசம் கண்ட தெய்வக்காட்சியை உ வ ைம கூறி விளக்குவதாக அமைந்தது:

விரிகின்ற ஞாயிறு போன்றதுமேனியஞ் ஞாயிறு சூழ்ந் தெரிகின்ற வெங்கதி ரெசித்தது செஞ்சடையச்சடைக்கீழ்ச் சரி கின்ற காரிருள் போன்றது கண்டமக் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுளதாலெந்தையொண்

பொடியே 26)

என்ற திருப்பாடலாகும்.

இருள் நிறந்தங்கிய திருமிடற்றின்ை இரவாகவும், தன் செம்மேனியொளியாற் பகலாகவும், வேதப்பொருளாக மேன்மேலுயர்ந்து சலிப்பின்றி விளங்குதலால் (மரையாகிய மானைத் தாங்குதலால்) மலையாகவும், திருவைந்தெழுத்தின் பொருள் நிரம்பிய திருவடையாளமாகிய கொன்றை மலர் மாலையையணிந்தமையால் கொன்றை பூத்து விளங்கும் முல்லை நிலமாகவும், பாம்புகள் ஊர்ந்து வழ்தலால்

இ.

புற்ருகவும், மதிசூடுதலால் விசும்பாகவும் கங்கை நீரை யேற்றலாற் கடலாகவும், ஆட்பாலவர்க்கருளும் அருள் காரணமாகப் பலவேறு திருவுருவங்களே மேற்கொள்ளுத

லால் இங்குக் கூறப்படாத வேறுபல வண்ணங்களாகவும் சிவபெருமான் விளங்குமியன் பினை

இருளர் மிடற்ருல் இராப் பகல்தன்னல், வரைமறையாற். பொருளார் கமழ் கொன்றையால் முல்லை, புற்றி ரவாடுதலால், தெருளார் மதிவிசும்பாற் பெளவந்தெண் புனல்

- தாங்குதலால், அருளாற் பலபல வண்ணமுமா அரணுயினனே. (57)

என்ற பாடலால் விரித்துரைப்பர்.

தன்னை வழிபடும் மெய்யடியார்களைச் சாதற்றுன்பத்தி னின்றும் நீக்கி நிலமிசை நீடுவாழச் செய்தலாற் காலகால

  • . •, ༩ན་ལ་ཧ་ཤན་མ་ & & : « 3. :بي سيع عنهم مث 影 - ஞகவும், பிறவிப்பிணி தீர்த்தலால் நன்மருந்தாகவும், அடி