பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 589

என்ற திருப்பாட்டு. உலக வாழ்க்கை துன்பத்திற் கிடவை தென்பதும், உயிர்கள் தம் முயற்சி யொன்றினுலேயே வினைத் தொடக்கினின்றும் மீணமுடியாதென்பதும், வினே யின் நீங்கி விளங்கிய அறிவினனுகிய இறைவனே உயிர் களின் உளத் தூய்மைக்கேற்ப அவ்வுயிர்களைப் பு:சப்பிணிப் பினின்றும் விடுத்தருளிப் பேரின்பம் வழங்க வல்லவன் என்பதும் ஆகிய உண்மைகள் இத்திருப்பாடலாற் புலப் படுத்தப்பட்டமை காணலாம்.

சேரமான் பெருமாள் நாயனர் பொறிவாயிலைந்தவித் தாளுகிய இறைவன் அருளிய திருவருள் நெறியில் தாம் சென்ற அநுபவத்தை விரித்துரைப்பன,

திவினையேனை நின் றைவு ரிசாப் பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்து விட்டேன்

வினையும் ஒவினது உள்ளத் தெளிந்தது கள்ளங் கடிந்தடைந்தேன் பாவின செஞ்சடை முக்கண னுரணன் பாதங்களே. {18}

சிந்தனை செய்ய மனமமைத்தேன் செப்ப நாவமைத்தேன் வந்தனே செய்யத் தலையமைத்தேன் கைதொழவமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத்தேன் மெய்யரும்ப வைத்தேன் வெந்த வெண்ணிறனி யீசற்கிவையான் விதித்தனவே, (92)

எனவரும் பாடல்களாம். கொடு வினை:ேகுகிய என்னை ஐம்புலன்களாகிய வேடர் ஐவரும் செத்தித் தின்னு தலால் அவர்களது தொல்லைக்குட்பட்டு உடலொடு வாழும் இவ்வாழ்க்கையை அருவருத்தேன். வெறுத்து ஒழித்து விட்டேன். எனது பழவினையாகிய பகையும் என்னை விட்டொழிந்தது . அ. த சூ ல் என் னுள்ளமும் தெளிவு பெற்றது. உள்ளத்திலுள்ள வஞ்சனை முதலிய மாசுகளைத் துவரத்துடைத்து முக்கட்பகலகிைய சிவபெரு மானுடைய திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அப்பெருமானைச் சிந்தித் தற்கென்றே என் மனத்தைத் திருத்தமுடையதாகச் செய்தேன். அவனது பொருள் சேர் புகழைச் சொல்லுதற்கே என் நாவை உரிமைப்படுத்தி னேன். அவன் திருவடிகளைத் தொழு தற்கே என் தலையை உரிமையாக்கினேன். அவனைத் தொழுதலாகிய திருப் பணிக்கே என் கைகளைப் பயன்படச் செய்தேன். அவனது திருவருளைக் கடைப்பிடியாகப் பற்றுதற்பொருட்டே