பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592

பன்னிரு திருமுறை வரலாறு


மறவாதிருத்தலே உயிர்களுக்குரிய உறுதிப் பொருளாகும் என்ற மெய்ம்மையினகறிவுறுத்தும் இத்திருப்பாடல்,

புழுவாய்ப் பிறக்கினும் புண் ணியா வுன்னடி யென்மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பாதிரிப் புலியூர்ச் செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடைமேல் வைத்த

ழுநீர்ப் புனற் தீவண்ணனே.

எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியை அடியொற்றி அமைந்தமை உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

மும்மணிக்கோவையென்பது, வேறுவேறு நிறமுடை மூவகை மணிகளாற் கோக்கப் பெற்ற மாலைபோன்று ஆசிரியம் வெண்பா க ட் ட ளே க் கலித்துறை என்ற மூவகைச் செய்யுட்களால் ஆந்தாதித் தொடையமைய இயற்றப்பெறும் செந்தமிழ்ப் பிரபந்தமாகும். இப்பிர பந்தம் முப்பது பாடல்களாக நிறைவுபெறுதல் வேண்டு மென்பது விதி. Հ * - " "- கிடைத்துள்ள தமிழ் நூல் களுள் மும்மணிக்கோவையென்னும் இப்பிரபந்தத்திற்குரிய மூல இலக்கியமாக விளங்குவது சேரமான் பெருமாள் நாயனுர் அருளிச்செய்த திருவாரூர் மும்மணிக்கோவை யொன்றேயாம். திருவாரூரிற் கோயில் கொண்டு எழுந் தருளிய சிவபெருமானைப் போற்றுவதாதலின் இது திரு வாரூர் மும்மணிக்கோவையென்னும் பெயர்த்தாயிற்று. தில் லைச் சிற்றம்பலத்தையடைந்து பொன் வண்ணத் திரு வந்தாதி பாடிப் போற்றிய சேரமான் பெருமாள் நாயனுர் திருவாரூரையடைந்து நம்பியாரூரைத் தோழராகப் பெற்று அவருடன் பூங்கோயிலமர்ந்த பெருமானைப் போற்றிப் பரவும் நிலையில் இத்திருமும்மணிக்கோவையைப் பாடியரு ளினரென்பதும், தம் தோழராகிய நம்பியாரூரர் கேட்டு மகிழ இதனை இறைவர் திருமுன்பு அரங்கேற்றினரென் பதும் வரலாறு. கட்டளைக் கலித்துறையும் வெண்பாவு மாகிய இருவகைப் பாக்களும் ஒன்றன் பின் ஒன்ருக அந்தாதித் தொடையால் தொடுத்துவர இருபது செய்யுட் களால் இவன்றது இரட்டைமணிமாலையென்பதும், அதனை முதன் முதல் அருளிச் செய்தவர் காரைக்காலம்மையார் என்பதும் முன்னர்க்கூறப்பட்டன. அவ்விருவகைப் பாக் களுடன் ஆசிரியப் பாவையும் ஒரு மணியாகக் கொண்டு மும்மணிக் கோலையென்ற செந்தமிழ்ப் பனுவலை முதன்