பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் fliš

இல்லாரை யெல்லாரும் எள் குவார் செல்வரை எல்லா ருஞ் செய்வர் சிறப்பென்னுஞ் -சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந் தொடு பூண் புனைந்து நல் கூர் இடையிடையே யுள்ளுருகக கண்டாள் :

என அரிவையின் அணிநலங்களைப் புலப்படுத்துமிடத்தும்

கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்

ஒண்டொடி கண்ணே யுளவென்று-பண்டையோர் கட்டுரையை மேம் படுத்தாள்

எனப் பேரிளம் பெண்ணின் இயல்புரைக்குமிடத்தும் இவ் வாசிரியர் திருக்குறளை மேற்கோளாக எடுத்தாண் டுள்ளமை பொய்யில் புலவர் அரு ளிய திருக்குறளில் இவர் கொண்ட பேரார்வத்தை இனிது புலப்படுத்துவதாகும்.

5. நக்கீர தேவ நாயனர்

நக்கீரர் பாடியனவாகக் கயிலைபாதி காளத்தி பாதி யந்தாதி, திருவீங்கோய்மலை யெழுபது, திருவலஞ்சுழி மும் மணிக்கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவ பாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றித் திருக்கலி வெண்பா, திரு முருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் எனப் பத்துப் பிரபந்தங்கள் பதினுெராந் திரு முறையிற் சேர்க்கப் பெற்றுள்ளன. இப் பிரபந்தங்களைப் பாடிய ஆசிரியராகிய நக்கீரரைப்பற்றியும் இப் பிரபந் தங்கள் பாடப்பெற்ற சந்தர்ப்பங்களைக் குறித்தும் தம்முள் முரண்பட்ட கதைகள் சில வழங்கி வருகின்றன. இக் கதைகள் பதினுெராந் திருமுறையாசிரியருள் ஒருவராகிய நக்கீரரது மெய்மை வரலாற்றினை அறிந்து கொள்ளுதற்கு எந்த அளவு பயன்படுவன என்பதை ஈண்டு ஆராய்ந் தறிதல் இன்றியமையாததாகும்.

(1) நக்கீரரைப்பற்றிப் பெரும்பற்றப்புலியூர் நம்பி கூறுவன

மதுரையில் தமிழ்ச்சங்கப் புலவர் வேண்டுகோட் கிரங்கிப் புலவர்களின் புலமை வரம்பினை அறுதியிட்டுக் காட்டும் சங்கப் பலகையினைத் தந்தருளிய திருவால வாயிறைவர், சங்கப் புலவர் பழந்தமிழ்ச் செய்யுட்களின் பொருள் நலங்களை வரையறுத்து ஆராய்ந்து அமைதி காண இயலாது மனங்கவன்ற காலத்துத் தாமும் ஒரு