பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618

பன்னிரு திருமுறை வரலாறு


கிைய உப்பூர் கிழான் மகனும் ஐந்தாட்டைப் பருவத் தினனும் ஊமைப் பிள்ளையுமாகிய உருத்திரசன்மனைப் பாவறிமண்டபத்தின் நடுவே அரியாசனத் தமர்த்தி வழிபட்டுப் புலவர்கள் தாம் தாம் கருதியவற்றைப் பொருளாக உரைத்தனர். அவற்றைக்கேட்ட உருத்திர சன்மன் அவ்வுரைகளைப் பற்றியெதுவும் புலப்படுத் தாது, நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய இம்மூவரும் உரை கூறிய அளவில் அவர்தம் உரைகளே விருப்புடன் கேட்டு மெய்ம் மயிர் சிலிர்த்துக் கண் ணிரரும்பி இவ்வுரைகளே மெய்ம்மை யுடையன எனப் புலப்படுத்தின்ை. இதுவே நக்கீரரைப் பற்றித் திருவாலவாயுடையார் தி ரு வி ளே ய | ட ற் புராணத்திற் கூறப்படுங் கதையாகும். இக்கதையினையே பரஞ்சோதி முனிவரும் தாம் பாடிய திரு விளையாடற் புராணத்திற் சிறிது வேறுபட விரித்துக் கூறியுள்ளார்.

(2) பரஞ்சோதி முனிவர் கூறுவன:

நெற்றிக் கண்ணின் வெப்பத்திற்கு ஆற்ருது பொற்ரு மரைத் தடாகத்தில் வீழ்ந்து வருந்திய நக்கீரர் சங்கப் புலவர் வேண்ட அங்கு எழுந்தருளிய அம்மையப்பராகிய இறைவரது திருவருள் நோக்கினல் கருவி கர ண ங்கள் தூய்மையடையப்பெற்றுத் திருக்கயிலையிலும் திருக்காளத்தி யிலும் இறைவன் வீற்றிருந்தருள் புரியுந் திறத்தினை அடுத்தடுத்துப் போற்றுங் கருத்து டையராய்ச் சொல்லும் பொருளுமே எனத் தொடங்கும் திருவந்தாதியைப் பாடிப் போற்றினரென்றும், அப்பனுவலைக் கேட்டருளிய இறைவர் நக்கீசரைக் கரையேற்றியருளினரென்றும், கரையேறிய நக்கீரர் இறைவரைப் பணிந்துநின்று, சிவபெருமாளுகிய பெரியோன் தீமையும் நன்மையும் புரிந்த வர்களுக்கு முறையே சினத்தையும் அருகி யும் மேற் கொண்டு நிகழ்த்திய செயல்களைப் பொருளாகக் கொண்டு கோபப்பிரசாதம் என்ற பிரபந் த்தையும் பெருந்தேவ பாணி திருவெழு கூற்றிருக்கை ஆகிய பிரபந்தங்களையும் பாடிப்போற்றினுசென்றும் பரஞ்சோதி முனிவர் தாம் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற் குறிப்பிட்டுள்ளார்.

(3) கல்லாட நூலாசிரியர் கூறுவ:ை

நக்கீரர் இறைவனது நுதல் விழியின் வெப்பத்திற்கு ஆற்ருது பொற்ருமரைத் தடாகத்து அமிழ்ந்த நிலையில்