பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பன்னிரு திருமுறை வரலாறு


தார். ஆன்மநாதராகிய கடவுள் மானிடவுருவுடன் மானுக் கர் பலர் சூழக் குருந்த மரத்தடியில் அமர்ந்திருப்பதாகவும் தாம் அவருடைய திருவடிகளைப் பணிந்து துதிப்பதாகவும் கனவு கண்டு விழித்தெழுந்தார். விடியற் காலையிலே நாட் கடன்களை முடித்துக்கொண்டு தாம் கனவிற் கண்ட வண் னமே குருந்த மர நீழலிலே குருவாக வீற்றிருந்தருளிய பெருமானைக் கண்டு வணங்கி அவர்பால் ஞானோபதேசம் பெற்ருர் எனத் திருப்பெருந்துறைப் புராணம் கூறும்.

இவ்வாறு புராணங்களிற் பல படியாகப் புனைந்துரைக் கப்பெறும் திருவாதவூரடிகளது வரலாற்றினை அடிகளார் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய திருமுறையிற் காணப்படும் வரலாற்றுக் குறிப்புக்களாகிய அகச்சான்றுகளையும் பிற நூற் குறிப்புக் களையும் துணையாகக் கொண்டு ஆராய்ந்து துணிதல் அமை வுடையதாகும.

திருவாதவூரடிகள் அருளிய திருமுறையில் அடிகள் பிறந்தருளிய ஊர், குலம், அவருடைய பெற்ருேச் பெயர் முதலியவற்றைந் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் அடிகள் பிறந் தருளியலுர் திருவாதவூரே யென்பது, திருவாதவூர்ச் சிவ பாத்தியன் ' என நம்பியாண்டார் தம்பி திருவாதவூரடி களைக் குறித்துப் போற்றுதலால் இனிது விளங்கும். அடிகள் திருவாதவூரில் மானமங்கலத்தாராகும் தொன்னெறி முனி வர் ஆமாத்தியர் குலத்திற் பிறந்தார்’ எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். வாதவூரில் அமாத்தியர்குடியில் துயசிவாகம நெறியின் துறைவிளங்க அடிகள் அவதரித்தார்’ என்பர் பரஞ்சோதிமுனிவர். வாத வூரில் மறையோரில் அருள்புனை மாத்தியர் குலத்தில் சைவ நெறித்தலைவனுகத் திகழ்ந்த அந்தணனுக்குப் புதல்வராக வாதவூரர் அவதரித்தார்' எனக் கடவுள் மாமுனிவர் கூறுவர்.

1. கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 58.

2. திருவால வாயுடையார் திருவிளையாடற்புராணம், ஞாளுேப தேசஞ் செய்த திருவிளையாடல் 8-ஆம் செய்யுள்.

3. திருவிளையாடற்புராணம், வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 4-ஆம் செய்யுள்.

4. திருவாதவூரடிகள் புராணம், மந்திரிச்சருக்கம் கீ-ஆம் செய்யுள்,